காதலர் தான் முக்கியம்.. கமலஹாசனை ஒதுக்கிவிட்டாரா ஸ்ருதி?

சென்னை : கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளாததால், அப்பாவுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா என கேட்டு வருகின்றனர்.

விக்ரம்

விக்ரம்

விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய்சேதுபதி, சிலம்பரசன், நரேன், உதயநிதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்

இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது, எனக்கு எப்படி எனது தந்தை திரைக்குப்பின் குரு, அதுபோல, நடிகர் கமலஹாசன் எனக்கு திரைக்கு முன் குரு என்று கலகலப்பாக பேசியிருந்தார். இந்த நிகழ்ச்சியில், கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் மட்டும் கலந்து கொண்டார்.

காதலர் தான் முக்கியம்

காதலர் தான் முக்கியம்

மும்பையில் காதலர் சாந்தனு ஹசாருடன் லிவ்விங் டூ ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் ஸ்ருதி, பப்பு, ஷாப்பிங் என பல இடங்களில் சுற்றி வருகிறார். ஆனால், நேற்று நடைபெற்ற விக்ரம் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால், ரசிகர்கள் அப்பா படவிழாவில் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், ஸ்ருதி மட்டும் பங்கேற்காததற்கு என்ன காரணம் என்றும்,ஏதாவது பிரச்சனையா... காதலருக்காக அப்பாவை ஓரம் கட்டி விட்டுவிட்டீர்களே என்றும் கேட்டுவருகின்றனர்.

படங்கள் இல்லை

படங்கள் இல்லை

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு சிங்கம்3 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் எந்த திரைப்படங்களும் கைவசம் இல்லை. பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும், 'சலார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பை முடிந்த பின்னர் ஸ்ருதி - பாலகிருஷ்ணா நடிக்க உள்ள படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X