ப்பா.. எவ்ளோ க்யூட்.. அழகு சீரியல் சுதாவின் அசத்தல் போட்டோஸ்.. தீயாய் பரவும் பிக்ஸ்!

சென்னை: அழகு சீரியல் ஹீரோயின் ஸ்ருதி ராஜின் க்யூட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான ஸ்ருதி ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் கடைசியாக இயக்கம் என்ற படத்தில் நடித்தார் ஸ்ருதி ராஜ். தொடர்ந்து சீரியல் பக்கம் திரும்பினார்.

சன், விஜய், ஜீ தமிழ்

சன், விஜய், ஜீ தமிழ்

2009ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்து பெரும் பிரபலம் ஆனார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். பின்னர் ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பான அண்ணக்கொடியும் ஐந்து பெண்களும் சீரியலில் நடித்தார்.

படப்பிடிப்பு இல்லை

படப்பிடிப்பு இல்லை

2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சன் டிவியில் அபூர்வ ராகங்கள் மற்றும் அழகு ஆகிய இரண்டு சீரியல்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் லாக்டவுன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக எந்த சீரியல் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

ஊரடங்கில் தளர்வுகள்

ஊரடங்கில் தளர்வுகள்

இதனால் இத்தனை நாளாக அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.

முடிவுக்கு வரும் அழகு

முடிவுக்கு வரும் அழகு

இந்நிலையில் பல தொலைக்காட்சி சேனல்களில் இன்று முதல் சீரியல்களின் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அழகு சீரியல் குறித்த எந்த அறிவிப்பும் வெளி ஆகவில்லை. அழகு சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதி ராஜ் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இன்ஸ்டாவில் போட்டோக்கள்

இன்ஸ்டாவில் போட்டோக்கள்

இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை அப்படி வர்ணித்து வருகின்றனர்.

விரைவில் தெரியப்படுத்துகிறேன்

விரைவில் தெரியப்படுத்துகிறேன்

சுடிதார் சேலை என ஹோம்ளி லுக்கில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் ஏதாவது புதிய சீரியலில் கமிட்டாகியிருக்கிறீர்களா என கேட்டு வருகின்றனர். அதற்கு விரைவில் தெரியப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதி ராஜ்.

டீஷர்ட் கூலிங் கிளாஸ்

டீஷர்ட் கூலிங் கிளாஸ்

ஹோம்லி லுக்கில் அசத்தியுள்ள நடிகை ஸ்ருதி ராஜ் மாடர்ன் டிரெஸிலும் பட்டைய கிளப்பியுள்ளார். அதாவது நீல நிற ஜீன்ஸ் அணிந்துள்ள நடிகை ஸ்ருதி ராஜ், கறுப்பு நிற டீஷர்ட் கூலிங் கிளாஸ் என அசத்தியுள்ளார். கொண்டை போட்டப்படி ஸ்ருதி ராஜ் கெத்தாக உட்காந்திருக்கும் இந்த போட்டோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X