ஹிந்தி பிக்பாஸ்.. கெத்தாக சென்ற தமிழ் நடிகை.. சாதிப்பாரா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வம்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடக்கிறது. ஹிந்தி பிக்பாஸ் இதுவரை 17 சீசன்கள் நடந்திருக்கின்றன. இந்தச் சூழலில் தற்போதைய சீசனும் தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல் சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இந்த ஹிந்தி பிக்பாஸில் தமிழ் நடிகை ஸ்ருதிகா கலந்துகொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு ஹிந்தியில் முதன்முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. அங்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது. தமிழில் இப்போது எட்டாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த சீசனை கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 8 தமிழை பொறுத்தவரை இப்போதே பஞ்சாயத்துக்கள் ஆரம்பித்திருக்கின்றன.

bigg boss sruthika

பிக்பாஸ் 18: இதற்கிடையே ஹிந்தியில் பிக்பாஸ் இதுவரை 17 சீசன்கள் நடந்திருக்கின்றன. இப்போது பிக்பாஸ் சீசன் 18 தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஹிந்தி பிக்பாஸிலும் 18 பேர் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த முறை பலருக்கும் ஆச்சரியம் தரும் விதமாக ஒரு விஷயம் நடந்தது. அதாவது ஹிந்தி பிக்பாஸில் தமிழ் நடிகை ஸ்ருதிகாவும் கலந்துகொண்டிருக்கிறார்.

முதல் ஆள்: இதுவரை ஹிந்தியில் நடந்த 17 சீசன்களிலும் ஒரு தமிழ் நடிகரோ, நடிகையோ கலந்துகொண்டதில்லை. ஸ்ருதிகாதான் முதல் ஆள் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். ஸ்ருதிகா பழம்பெரும் நடிகர் தேங்கா சீனிவாசனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா குடும்ப பின்னணியில் பிறந்த இவர் சூர்யா நடிப்பில் வெளியான "ஸ்ரீ" திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி, தித்திக்குதே,நளதமயந்தி திரைப்படங்களிலும்,மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஃபேமஸான ஸ்ருதிகா: சில ஆண்டு கால இடைவெளிக்குப்பின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கிய குக் வித் கோமாளி சீசன் 3, நிகழ்ச்சியில் பங்கேற்று,தனது குறும்புக்கார குணத்தினால் மக்கள் மனதை வென்றார்.அதைத்தொடர்ந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் இன்று ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில்,போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

எதில் பார்க்கலாம்: இந்த‌ ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் தொலைக்காட்சி தினமும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பு செய்கிறது,ஜியோ சினிமா வலைத்தளம் இந்நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்கிறது. இன்று முதல் நாள் எபிசோடில் ஸ்ருதிகா தனது காதல் கதையை சக போட்டியாளர்களிடம் கூறும் ப்ரோமா வரவேற்பைப் பெற்று வருகிறது.ஸ்ருதிகா, தொடர்ந்து விளையாடி 100 நாட்களை வெற்றிகரமாக முடித்து டைட்டில் வின்னராக வர வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X