எப்போதும் படுக்கைக்கு அழைக்கிறார்.. மறுத்தால் அடிக்கிறார்.. திருமணத்தை நிறுத்திய பிரபல சீரியல் நடிகை

காதலர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் தந்ததாக பிரபல சீரியல் நடிகை சுபுஹி ஜோஷி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

மும்பை: படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தி, தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி டிவி நடிகருடனான திருமணத்தை நிறுத்தியுள்ளார் பிரபல சீரியல் நடிகையான சுபுஹி.

பிரபல இந்தி சேனல் ஒன்றில் காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா போன்ற முக்கிய தொடர்களில் நடித்தவர் சித்தார்த் சாஹர். இவரும் சின்னத்திரை நடிகையுமான சுபுஹியும் கடந்த 2014ம் ஆண்டு காதலிக்கத் தொடங்கினர்.

ஆனால், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டால் அவர்களது காதல் முறிந்தது. இருவரும் மீண்டும் தங்கள் நடிப்பில் பிசியாகினர்.

திருமணம்:

திருமணம்:

ஆனால், இந்தப் பிரிவு நிரந்தரமாக நீடிக்கவில்லை. மீண்டும் இருவரும் சமாதானமாகி காதலிக்கத் தொடங்கினர். இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

பிரிவு:

பிரிவு:

எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சித்தார்த்துடனான திருமணத்தை நிறுத்துவதாக சுபுஹி தெரிவித்துள்ளார். இதற்கான காரணமாக அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சித்தார்த் ஒரு சைக்கோ:

சித்தார்த் ஒரு சைக்கோ:

‘சித்தார்த் சைக்கோ போல நடந்து கொள்கிறார். திருமணத்தில் அவருக்கு இஷ்டம் இல்லை போல. என்னை ஆபாசமாக திட்டி, முரட்டுத்தனமாக அடிக்கிறார். எப்போதும் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என துன்புறுத்துகிறார். மறுத்தால் மோசமாக அடிக்கிறார். இதனால் தான் அவரைப் பிரிய முடிவெடுத்தேன்' என சுபுஹி தெரிவித்துள்ளார்.

விளக்கம்:

விளக்கம்:

ஆனால், சுபுஹியின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சித்தார்த், ‘சுபுஹிக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. இது எனக்கு தெரிந்ததும் என்னை விட்டு விலக முடிவு செய்துவிட்டார். நானும் அவரிடமிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டேன்' என பதில் விளக்கம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X