நடிகை சுகன்யாவின் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

நடிகை சுகன்யாவுக்கும் அமெரிக்காவில் பணியாற்றி வரும் ஸ்ரீதரன் என்ற சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2004ம் ஆண்டு சுகன்யா விவாகரத்து கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் தங்களது திருமணம் அமெரிக்காவில் நடந்ததால், இந்த வழக்கை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று ஸ்ரீதரன் கூறி குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இதையடுத்து, ஸ்ரீதரன் சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், சுகன்யா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கை விசாரிக்க இந்திய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று உத்தரவிடுமாறு ஸ்ரீதரன் கோரியுள்ளார்.
சுகன்யாவுக்கும், சென்னையில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த, அமெரிக்க குடியுரிமை பெற்றவரான ஸ்ரீதரனுக்கு நியூஜெர்சியில் உள்ள பாலாஜி கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டை அணுகினார் சுகன்யா. ஆனால் இதுகுறித்து ஸ்ரீதரனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. கோர்ட்டும் சம்மன் ஏதும் அனுப்பவில்லை. 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி சுகன்யாவுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அதே கோர்ட்டில் ஸ்ரீதரன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து விவாகரத்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











