Indian : கமலுக்கு வந்த சோதனை.. இந்தியன் படத்தில் சிக்கல்! நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்த நடிகை!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம்தான். லைகா புரெடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகின்றது. படத்தில் கமல்ஹாசன் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவில் இதுவரை படத்திற்கு சுமார் 2500 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் படம் இதுவரை ரூபாய் 54 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக படத்தில் கமல் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். மேலும் மிகவும் வயது முதிர்ந்த தோற்றத்திற்காக கமல் ஹாசன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தினமும் ஷாட் முடிந்த பின்னர் அவருக்கு போடப்பட்ட பிராஸ்தட்டிக் மேக்கப்பினைக் கலைக்க மூன்று மணி நேரம் ஆகும் என இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 புரோமோஷனில் பேசினார்.

இந்தியன்: இந்த படத்தின் முதல் பாகத்தில் கமல் ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக நடிகை சுகன்யா கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, அந்த படத்தின் கதை சொல்லும்போதே எனக்கு ஒரு காட்சி சொல்லப்பட்டது. உடனே நான் அந்த காட்சியை எவ்வாறு படமாக்கப்போகின்றீர்கள் எனக் கேட்டேன். அப்போது நான் மரத்துக்குப் பின்னால் இருப்பேன் எனவும் வெறும் வாய்ஸ் ஓவர்தான் எனவும் கூறினார்கள். மேலும் எனது கை பாதிதான் தெரியும் எனவும் கமல்ஹாசன் எனக்கு நெற்றியில் பொட்டு வைப்பார். அப்போது மட்டும் முகத்திற்கு க்ளோஸ் அப் வரும் என்றும் கூறினார்கள். அதன் பின்னர்தான் நான் படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டேன்.

உறுதுணையாக இருந்த ராதாரவி: அந்த காட்சி படமாக்கப்பட்டபோதுகூட எனக்கு மேக்கப் போட்டபோது நான் கேட்டேன். அப்போதும் ஏற்கனவே கூறியதுபோல் கூறினார்கள். ஆனால் காட்சி வேறுவிதமாக படமாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் உடனே நடிகர் சங்கத்தில் இது தொடர்பாக முறையிட்டேன். அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த ராதாரவி எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர் உடனே இது தொடர்பாக விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட காட்சி படத்தில் வராது என எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அதனை நினைத்து நான் இப்போதும் ராதா ரவி சாருக்கு நன்றி கூறுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இணையவாசிகள் கமெண்ட்: இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. கமல்ஹாசன் படத்தில் இப்படிநொரு சர்ச்சையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ நடிகையின் ஒப்புதல் இல்லாமல் எப்படி அவரை வற்புறுத்தி படத்தினை எடுக்க எப்படி படக்குழுவுக்கு தைரியம் வருகின்றது எனவும், ராதாரவி நடிகர் சங்கத் தலைவராக இருந்து சுகன்யாவிற்கு நீதியைப் பெற்றுக் கொடுத்துள்ளார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











