சித்தப்பாவை உலகமே கொண்டாடுது.. மகிழ்ச்சியை சொல்ல மொழியே இல்ல.. சுஹாசினி பதிவிட்ட க்யூட் போஸ்ட்!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் சர்வதேச அளவில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்ந்து உலக பாக்ஸ் ஆபீசில் 360 கோடி ரூபாய்களை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது விக்ரம் படம்.

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள இந்தப் படம் தற்போது இந்த அளவிற்கு அவருக்கு சக்சஸ் கொடுத்துள்ளது.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியாகியுள்ளது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் மேக்கிங், மிரட்டலான காட்சிகள், திரைக்கதை உள்ளிட்டவை ரசிகர்களை காந்தமாக திரையரங்குகளை நோக்கி ஈர்த்து வருகிறது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள நிலையில், சிறப்பான வகையில் இவர்களை படத்தில் பயன்படுத்தியுள்ளார் லோகேஷ். குறிப்பாக சில நிமிடங்களே படத்தில் நடித்துள்ள சூர்யா படத்தை தூக்கி நிறுத்துகிறார். அவரது கேரக்டர் மிகவும் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 கொண்டாட காரணம்

கொண்டாட காரணம்

படத்தில் ரசிகர்கள் கொண்டாட பல காரணங்கள் படத்தில் உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டலான காட்சி அமைப்புகள் படத்தில் காணப்பட்டன. மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்தப் படத்தை லோகேஷ் உருவாக்கியுள்ள நிலையில், அவர் படத்திற்காக அதிகமாக மெனக்கெட்டுள்ளது தெரியவருகிறது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

தொடர்ந்து அவர் விஜய்யின் தளபதி67 படத்தை இயக்கவுள்ள நிலையில், படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு தினத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் 40 வயது கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகளும் உள்ளதாம்.

கமலுக்கு சுகாஹினி பாராட்டு

கமலுக்கு சுகாஹினி பாராட்டு

விக்ரம் படத்தை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையும் கமல்ஹாசனின் அண்ணன் மகளுமான சுகாஹினியும் கமலுக்கு தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளோ மொழியோ தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகமே சித்தப்பாவை கொண்டாடுகிறது

உலகமே சித்தப்பாவை கொண்டாடுகிறது

மேலும் தன்னுடைய சித்தப்பாவிடம் பேசுவதை காட்டிலும் தான் அவருக்கு தன்னுடைய அன்பை காட்டவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மொத்த உலகமும் அவரை கொண்டாடி வருவது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான படங்களில் நடித்த சுகாஹினி

சிறப்பான படங்களில் நடித்த சுகாஹினி

கமலின் நடிப்பு குடும்பத்திலிருந்து வந்த சுகாஹினி பல சிறப்பான படங்களில் நடித்துள்ளார். அவரது கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி போன்ற படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படங்கள். தொடர்ந்து பல சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் சுகாஹினி. இவரது கணவர் பிரபல இயக்குநர் மணிரத்னம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X