சரத்பாபு மறைவு.. முதல் ஆளாக வந்து இறுதி சடங்கு ஏற்பாடுகளை கவனித்த சுஹாசினி!

சென்னை : நடிகர் சரத்பாபு மறைந்த செய்தி இணையத்தில் வெளியானதும் நடிகை சுஹாசினி முதல் ஆளாக வந்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு நேற்று காலமானார்

இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actress Suhasini make arrangements for Sarath Babu funeral

சரத்பாபு காலமானார் : தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட உலகில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ள சரத்பாபு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பல வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் முழுவதும் செப்சிஸ் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்தார். இது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முதல் ஆளாக வந்த சுஹாசினி : சரத்பாபு உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்டதும் முதல் ஆளாக வந்து இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை நடிகை சுஹாசினி கவனித்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுஹாசினி, நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நானும், சரத்பாபுவும் சேர்ந்து நடித்திருந்தோம். அவருடன் இணைந்து இதுவரை 40 படங்களில் நடித்துள்ளேன்.

Actress Suhasini make arrangements for Sarath Babu funeral

குடும்பத்துடன் பேசினேன் : அவரது உடல்நிலை சரியில்லை என்பதை கேள்விப்பட்டதும் அவர்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தினமும் அவரின் உடல்நிலை குறித்து விசாரித்துக்கொண்டுதான் இருந்தேன். முதலில் பெங்களுர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது, காய்ச்சல் அதிகமானதால் ஹைதராபாத் மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.

Actress Suhasini make arrangements for Sarath Babu funeral

கெட்டப்பழக்கமும் இல்லை : சரத்பாபு ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், தமிழில் தான் நிறைய படங்களில் நடித்துள்ளார். அவருக்கு ரஜினி, கமல் என பல நண்பர்கள் இருக்கிறார்கள் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை, இருந்தாலும் அவருக்கு இப்படி ஒரு நோய் இருக்கு என்பதே தெரியவில்லை. இதுகுறித்து முன்பே பரிசோதித்து இருந்தால் நோய் குறித்து தெரிந்து இருக்கும் காப்பாற்றி இருக்க முடியும். இதனால், நடிகர் தங்கள் உடல் மீது கவனம் வைத்து உஷாராக இருக்க வேண்டும் என்று சுஹாசினி அந்த பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X