twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது நாயகி சுஹாசினிக்கு இன்று பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்!

    |

    சென்னை : சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சுஹாசினி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    Recommended Video

    Suhasini hasan yoga challenge | Qurantine | Lock down life

    தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தனது சிறந்த நடிப்பிற்காக பெற்ற சுஹாசினி அதேசமயம் இந்திரா என்ற திரைப்படத்தை இயக்கி தன்னை இயக்குனராகவும் நிரூபித்துள்ளார்.

    இவ்வாறு பிரபலமான நடிகையாகவும், பன்முகத் திறமை கொண்ட மிகச் சிறந்த திரை பிரபலமாகவும் வலம் வரும் சுஹாசினி மணிரத்னம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று தனது 59வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    கண்ணீரே வந்துவிட்டது.. இளையராஜாவின் வீடியோ குறித்து இளம் இசையமைப்பாளர் உருக்கம்!கண்ணீரே வந்துவிட்டது.. இளையராஜாவின் வீடியோ குறித்து இளம் இசையமைப்பாளர் உருக்கம்!

    ஒளிப்பதிவாளராக

    ஒளிப்பதிவாளராக

    தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது வாழ்க்கையை ஒளிப்பதிவாளராக தொடங்கி அசோக் குமார் உள்ளிட்ட பல ஒளிப்பதிவாளர்கள் உடன் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவரின் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்த நிலையில் "சிந்து பைரவி" திரைப்படத்தில் இவரது சிறந்த நடிப்பை பாராட்டி இவருக்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 1980களில் கொடிகட்டி பறந்த கதாநாயகிகளின் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்த சுஹாசினி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

    விஷ்ணுவர்தன் சுஹாசினி ஜோடி

    விஷ்ணுவர்தன் சுஹாசினி ஜோடி

    தமிழில் வெற்றி நாயகியாக கால் தடம் பதித்த இவர் கன்னடத்தில் நடித்த முதல் திரைப்படமான "பெண்கியள்ளி அரளிட கூவு" படத்தை இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கி இருந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி மெகா ஹிட் வெற்றித் திரைப்படமாக உருவானது. இந்நிலையில் கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் உடன் இவர் இணைந்து நடிக்கும் பெரும்பான்மையான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் விஷ்ணுவர்தன் சுஹாசினி ஜோடி வெற்றி ஜோடியாக பலராலும் பாராட்டப்பட்டது.

    இயக்குனராக அவதாரம்

    இயக்குனராக அவதாரம்

    இவ்வாறு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 200 திரைப் படங்களுக்கு மேல் நடித்து மிகச் சிறந்த நடிகையாக இன்று வரை விளங்கி வரும் சுஹாசினி 1995ஆம் ஆண்டு வெளியான "இந்திரா" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவ்வாறு திரைத்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் இன்று வரை தொடர்ந்து பணியாற்றிவரும் நடிகை சுஹாசினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    பிறந்தநாள்

    பிறந்தநாள்

    இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வரும் நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று தனது 59வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு திரைப் பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    Suhasini is a most important actress in 90's .not only as an actress she leads a very important role in the entire cinema.today she celebrates her birthday with her family members.all her fans shared their wishes through social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X