அன்னைக்கு அப்படி சொல்லிட்டு இன்னைக்கு இப்படி சொல்றீங்க.. பயில்வான் ரங்கநாதனை கிழித்துவிட்ட நடிகை!
சென்னை: பிரபல நடிகையான சுஹாசினி பயில்வான ரங்கநாதனை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.
முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
இவர் பல படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் போன்று சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்துள்ளார்.

மிஸ்டர் சென்னை பட்டம்
அதுமன்றி பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனங்களையும் எழுதி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். 53 வயதான பயில்வான் ரங்கநாதன் தனது இளம் வயதில் மிஸ்டர் சென்னை பட்டம் வென்றுள்ளார்.

பயில்வான் என்றழைத்த எம்ஜிஆர்
அவரது கட்டுமஸ்தான உடம்பை பார்த்த நடிகர் எம்ஜிஆர் அவரை பயில்வான் என்றழைக்க, அதுவே அவரது பெயருக்கு முன் அடைமொழியாக சேர்ந்து பயில்வான் ரங்கநாதன் என்றானார். கடைசியாக சாமி 2 படத்தில் நடித்தார் பயில்வான் ரங்கநாதன்.

நட்சத்திரங்களின் சீக்ரெட்
அதன்பிறகு பெரிதாக எந்த படத்திலும் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூட்யூப் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் சீக்ரெட் தகவல் கேரண்டியாக இடம்பெற்று விடும்.

பிரபல நடிகையிடம் திட்டு
அந்த வகையில் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றியே கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதாவது தான் பிரபல நடிகையிடம் நிகழ்ச்சி ஒன்றில் திட்டு வாங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஆம்பள மூஞ்சி மாதிரி இருக்கு
நடிகை சுஹாசினியின் முதல் படம் ரிலீஸ் ஆன போது அப்படம் குறித்த விமர்சனத்தை பத்திரிக்கையில் எழுதியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அப்போது இது பொம்பள மூஞ்சியா? ஆம்பள மூஞ்சி மாதிரி இருக்கு என விமர்சித்து எழுதியுள்ளார்.
Recommended Video

கிழித்துவிட்ட சுஹாசினி
பின்னர் பட விழா ஒன்றில் சுஹாசினியை பார்த்த பயில்வான் ரங்கநாதன், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நல்லா நடிக்கிறீங்க என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட சுஹாசினி, உண்மையை சொல்லுங்க, பத்திரிக்கையில் நீங்கள் தானே அப்படி எழுதினீர்கள் என்று கிழிகிழி என எல்லோருக்கும் முன்பும் கிழித்துவிட்டுள்ளார்.

நடிகர்களின் அந்தரங்கங்கள்
தன்னை முதல் முதலில் திட்டிய நடிகை சுஹாசினிதான் என்று கூறி இந்த தகவலை பகிர்ந்துள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். கடந்த சில நாட்களாக முன்னணி நடிகர்கள் பலரின் அந்தரங்க தகவல்களையும் கூறி வருகிறார் பயில்வான் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











