குந்தவை, வந்தியத் தேவன் காதல் காட்சி அட்டகாசமாக இருக்குமாம் - மணி ரத்னத்தின் பெஸ்ட் இதுதான்..

சென்னை: பொன்னியின் செல்வன் 2வில் குந்தவைக்கும் வந்தியத்தேவனுக்கும் இடையேயான காதல் காட்சி மிகச்சிறப்பாக இருக்குமென்று சுஹாசினி தெரிவித்திருக்கிறார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கின்றது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பொன்னியின் செவன் 2 ஏப்ரலில் ரிலீஸ்

பொன்னியின் செவன் 2 ஏப்ரலில் ரிலீஸ்

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோ நடித்திருந்தனர். முதல் பாகம் பெற்ற வரவேற்பை அடுத்து படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகிறது. பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக குந்தவையும், வந்தியத்தேவனும் இருக்கும். அதில் குந்தவை கதாபாத்திரத்தை த்ரிஷாவும், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை கார்த்தியும் ஏற்றிருப்பார்கள்.

குந்தவையாக கலக்கிய நடிகை த்ரிஷா

குந்தவையாக கலக்கிய நடிகை த்ரிஷா

ராஜதந்திர மிக்க பெண்ணாக குந்தவையை எழுத்தாளர் கல்கி வடிவமைத்திருப்பார். எனவே பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியானவுடன் பலரும் எதிர்பார்த்தது குந்தவை கதாபாத்திரத்தை யார் ஏற்கப்போகிறார் என்பதைத்தான். இதனையடுத்து அந்தக் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்தார். முதல் பாகத்தில் குந்தவைக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை. இருப்பினும் தான் வந்த காட்சிகளில் த்ரிஷா குந்தவையாக மாறி கலக்கியிருப்பார்.

வந்தியத்தேவனாக மாறிய கார்த்தி

வந்தியத்தேவனாக மாறிய கார்த்தி

அதேபோல் எப்போதும் துறுதுறுப்பாக இருக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை யார் ஏற்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை கார்த்தி ஏற்றிருந்தார். படம் முழுக்க துறுதுறுப்பாகவும், அருண்மொழி சோழனுக்கு உதவும் தோழனாகவும் என தனது நடிப்பை திறம்பட கையாண்டிருந்தார்.

அகநக பாடல் வெளியீடு

அகநக பாடல் வெளியீடு

படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடல் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி லிரிக்கல் வீடியோ இன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. அகநக பாடல் குந்தவையும், வந்தியத் தேவனும் இருக்கும் பாடலாக உருவாகியிருப்பது லிரிக்கல் வீடியோவை பார்க்கும்போது புரிகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடல் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வனின் பெஸ்ட் இதுதான்

பொன்னியின் செல்வனின் பெஸ்ட் இதுதான்

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையும், வந்தியத்தேவனும் காதலிக்கும்படி இருக்கும். இந்நிலையில் இருவருக்குமான காட்சிகள் குறித்து இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி பேசியிருக்கிறார். அதுகுறித்து பேசிய அவர், "பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்தித்துக்கொள்ளும் காட்சி ஒன்று இருக்கும். அது அவ்வளவு அருமையாக இருந்தது. மணிரத்னம் அமைத்த காட்சிகளிலேயே இந்த காட்சிதான் எனக்கு மிகவும் பிடிக்கும்" என பூரிப்புடன் தெரிவித்துள்ளார். அவர் பேசும் வீடியோவை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X