எடையை குறைச்சு.. கலக்கல் போட்டோ ஷூட் நடத்தியதற்கு காரணம் இதானா? பிக்பாஸ் பிரபலத்தின் அதிரடி முடிவு!

சென்னை: திருமணம் செய்துக்கொண்டு செட்டிலான பிக்பாஸ் பிரபலம் ஒருவர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக பங்கேற்றவர் நடிகை சுஜா வருணி. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலான படங்களில் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் ஒரு பாடலுக்கே அதிகம் நடனமாடியுள்ளார். சில படங்களில் குணிச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனின் பேரன்

சிவாஜி கணேசனின் பேரன்


ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் சுஜா வருணி. தமிழில் கடைசியாக சத்ரு படத்தில் நடித்தார் சுஜா வருணி. இதனை தொடர்ந்து நடிகை சுஜா வருணி கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசனின் பேரனான நடிகர் சிவாஜி தேவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

த்ரிஷ்யம் 2 படம்

த்ரிஷ்யம் 2 படம்

இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஆத்வித் என்ற மகன் பிறந்தார். திருமணம் ஆகி செட்டிலானதால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் நடிகை சுஜா வருணி. 'சுசீஸ் ஃபன்' என்ற பெயரில் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார் சுஜா வருணி. இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கில் உருவான 'த்ருஷ்யம் 2' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தல் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சுஜா வருணி.

கலக்கல் போட்டோஸ்

கலக்கல் போட்டோஸ்

இந்தப் படம் சமீபத்தல் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என தெரிகிறது. சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை சுஜா வருணி கலக்கல் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

போலீஸ் யூனிஃபார்மில்

போலீஸ் யூனிஃபார்மில்

அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் உள்ளதாலேயே சுஜா வருணி கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே த்ரிஷ்யம் 2 தெலுங்கு படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சுஜா வருணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X