பிபி ஜோடிகள் நிகழ்ச்சியால் கலைந்த கரு.. சோகத்தின் உச்சம்.. சுஜா வருணி -சிவா சொன்ன ஷாக்கிங் தகவல்!

சென்னை : பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் அமீர் -பாவ்னி மற்றும் சுஜா வருணி -சிவா ஜோடி டைட்டிலை வென்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே தன்னுடைய சிறப்பான பர்பார்மென்சை சிவா மற்றும் சுஜா வருணி கொடுத்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் இந்த வெற்றியாளர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது விஜய் டிவி. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடந்து முடிந்துள்ளது. ரசிகர்களின் சிறப்பான வரவேற்புக்கு இடையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுத்துவந்த இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

களைகட்டிய நிகழ்ச்சி

களைகட்டிய நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களது சிறப்பான டான்ஸ் பர்மார்மென்சை கொடுத்து கலந்துக் கொண்டனர். ஆர்த்தி -கணேஷ், அமீர் -பாவ்னி, சுஜா வருணி -சிவக்குமார் என இந்த நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக களைகட்டியது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டுடன் போட்டியாளர்கள் களமிறங்கி ஆடினர்.

நடந்து முடிந்த இறுதிப்போட்டி

நடந்து முடிந்த இறுதிப்போட்டி

ஆரம்பம் முதலே சிறப்பான செயல்பாட்டை அமீர் -பாவ்னி மற்றும் சுஜா வருணி -சிவா ஜோடி கொடுத்து வந்தது. தன்னுடைய குழந்தையையும் கவனித்துக் கொண்டு சுஜா வருணி இந்த நிகழ்ச்சியில் சிவாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தார். இந்த நிகழ்ச்சியின் பைனல் கடந்த வாரத்தில் நடந்து முடிந்துள்ளது.

அமீர் -பாவ்னி & சுஜா -சிவா ஜோடி

அமீர் -பாவ்னி & சுஜா -சிவா ஜோடி

இதில் அமீர் -பாவ்னி மற்றும் சுஜா வருணி -சிவா ஜோடி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பர்பார்மென்சை ஆரம்பத்தில் இருந்து பார்த்துவந்த ரசிகர்கள் இந்த முடிவை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் தற்போது சிவா மற்றும் சுஜா இருவரும் பேட்டியொன்றில் இந்த நிகழ்ச்சியின் இடையில் நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

கர்ப்பமடைந்த சுஜா வருணி

கர்ப்பமடைந்த சுஜா வருணி

இந்த நிகழ்ச்சியின் ஹாரர் டாஸ்கின்போது மேடையில் ஆடிய சுஜா வருணி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவரையறியாமல் அவருக்கு யூரின் பாஸ் ஆகியுள்ளது. இதையடுத்து மருத்துவரிடம் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டபோது சுஜா வருணி கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை

8 வார கர்ப்பத்துடன் அவர் இருந்தது கண்டறியப்பட்ட நிலையில், டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து டாக்டரிடம் அறிவுரை பெற்றபின்பே தொடர்ந்து நிகழ்ச்சியில் சுஜா கலந்து கொண்டதாக சிவா தெரிவித்துள்ளார். ஆனால் திருமண டாஸ்கின்போது அவருக்கு ரத்தம் வெளியேறியதாகவும் இதனால் மீண்டும் மருத்துவரிடம் கன்சல்ட் செய்ததாகவும் தெரிவித்தார்.

கலைந்த கர்ப்பம்

கலைந்த கர்ப்பம்

ஆனால் இந்த முறை அவருக்கு கர்ப்பம் கலைந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதனால் அவரால் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாத நிலையில், இரு தினங்களிலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதாகவும் அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார் சிவகுமார்.

அதிர்ச்சியில் சிவக்குமார்

அதிர்ச்சியில் சிவக்குமார்

தான் எவ்வளவோ கூறியும் தனக்காக, தான் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சுஜா இத்தகைய ரிஸ்கை எடுத்ததாகவும் சிவக்குமார் தனது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தன்னுடைய மகன், தனக்கு தங்கை பாப்பா வேண்டும் என்று கூறிய நிலையில், தானும் பெண் குழந்தையை எதிர்பார்த்த நிலையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாருக்கும் சொல்லாத விஷயம்

யாருக்கும் சொல்லாத விஷயம்

ஆனால் அந்த சூழலில் இந்த விஷயம் தனக்கும் சுஜாவிற்கும் தன்னுடைய மேனேஜர் மற்றும் பயிற்சியாளருக்கு மட்டுமே தெரியும் என்றும் இந்த விஷயத்தை யாருக்கும் தெரிவிக்காமல், முகமலர்ச்சியோடு அந்த டாஸ்க்கை முடிக்க தனக்கு சுஜா அதிகமாக உதவியதாகவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X