தாய்மை எவ்வளவு புனிதமானது.. இப்படியா கேவலப்படுத்துறது.. சிவாஜி வீட்டு மருமகளை விளாசும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
அவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோ வெளியானதால் இருவரின் காதல் குறித்தும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவகுமார், சுஜா வருணியின் திருமணம் சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

சுஜா வருணி கர்ப்பம்
அவர்களின் திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இந்நிலையில் சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துள்ளார்.

கிளாமர் போட்டோஸ்
இதற்காக போட்டோ ஷுட் நடத்தி சில போட்டோக்களையும் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் அனைத்தும் கிளாமராக உள்ளது.

பிங்க் நிற உடையில்
தனது கணவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார் சுஜா. இருவரும் பிங்க் நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளனர்.

தொடை தெரியும்படி
கணவர் சிவகுமாரின் மார்பில் சாய்ந்தபடி ஒரு போட்டோவும் கணவருடன் லிப்லாக் கொடுத்தபடி ஒருபோட்டோவும் பதிவிட்டுள்ளார். மேலும் தொடை தெரியும் படி படு கிளாமராக ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.
12 வருட காதல்
இவை என்னுடைய ஃபேவரைட் போட்டோக்கள்.. உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.. இந்த போட்டோக்களுக்கு எந்த கேப்ஷனும் தேவையில்லை என நான் நினைக்கிறேன். இந்த போட்டோவே நான் எவ்வளவு பாதுகாப்பாகவும் பாதுகாக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை இவையே வெளிப்படுத்துகிறது. 12 வருட காதலை நீங்கள் பார்க்கலாம். என் கனவை என் கணவருடன் வாழ்ந்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தாய்மை வரம்
இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் தாய்மை என்பது வரம் அதை ஏன் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள் என கேட்டு விளாசியுள்ளனர்.
வாழ்த்து
அதேநேரத்தில் பலர் க்யூட் என்றும், உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும். உங்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்து கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











