ஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்: திரையுலகினர் அஞ்சலி

By Siva

Recommended Video

ஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்- வீடியோ

மும்பை:புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகை சுஜாதா குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர் சுஜாதா குமார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Actress Sujata Kumar succumbs to cancer

கடந்த 3 நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 11. 26 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அவர் உயிர் இழந்த செய்தியை அவரின் தங்கையான நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். சுஜாதாவின் மரண செய்தி குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தனர்.

சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார் சுஜாதா.

த்ரீ ரோசஸ் டீ விளம்பரம் மூலமாகவும் பிரபலமானார். தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான ராஞ்சனாவிலும் நடித்துள்ளார் சுஜாதா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X