Sukanya - இதெல்லாம் அந்த இடத்தில் நடக்குற காரியமா?.. இயக்குநரிடம் கேட்ட சுகன்யா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Sukanya (சுகன்யா) சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் பம்பரம் விடும் காட்சி தொடர்பாக சுகன்யா பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தனது அழகாலும், திறமையாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் பெருகின. இதன் காரணமாக விஜயகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார் சுகன்யா.

 Actress Sukanya Sharings about Chinna gounder Movie Experience

சின்ன கவுண்டர்: ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து மெகா ஹிட்டான படம் சின்ன கவுண்டர். அதில் சுகன்யா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் வெகுளித்தனமான கிராமத்து பெண்ணாக தோன்றிய அவர் எமோஷனல் காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக் அவருக்கு ரசிகர்களும் பெருகினர். அதேபோல் மகாநதி படத்திலும் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய சுகன்யா: சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்த சுகன்யா ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகையாக மட்டுமின்றி சில சோலோ ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் அவர், கன்னத்தில் முத்தமிட்டால் படத்த்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்டார்.

பழைய பேட்டி: இதற்கிடையே சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் சுகன்யாவின் வயிற்றில் பம்பரம் விடும் காட்சி அந்தக் காலத்தில் பெரும் விவாத பொருள் ஆனது. இந்நிலையில் அந்தக் காட்சி குறித்து சுகன்யா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. ஒரு பேட்டியில் பேசியிருக்கும் அவர், "அந்தப் படத்தில் வரும் பம்பர காட்சிக்காக இயக்குநர் உதயக்குமார் என்னிடம் பம்பரம் விட கற்றுக்கொள்ள ஒச்ன்னார். நானும் அதனையடுத்து கற்றுக்கொண்டேன்.

அந்தக் காட்சி: அப்போது என்னுடைய வயிற்றில் பம்பரம் விடும் காட்சி ஒன்று இருப்பதாக கூறினார். நான் உடனே இதெல்லாம் அந்த இடத்தில் நடக்குற காரியமா என்று கேட்டேன். கடைசியாக எப்படியோ என் வயிற்றில் பம்பரம் விடும் காட்சியை அழகாக எடுத்துவிட்டார். அந்தக் காட்சியில் ஆபாசமாக எனக்கு எதுவும் தெரியவில்லை.

 Actress Sukanya Sharings about Chinna gounder Movie Experience

முக்கியமாக அந்தக் காட்சியில் நடிப்பதற்காக ஒத்திகை எல்லாம் நடந்தது. எனக்கு மட்டும் மூன்று அசிஸ்டெண்ட்டுகள் அந்தக் காட்சியின் ஒத்திகைபோது இருதார்கள். முதலில் எனக்கு பயமாக இருந்தது. என்னால் பண்ணவே முடியாது என்று சொல்லிவிட்டேன். பிறகு ஒருவழியாக என்னை சம்மதிக்க வைத்தார்கள். நானும் நடித்துவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X