Silk Smitha - பரவால்லக்கா உடம்ப பார்த்தா பார்த்துட்டு போகட்டும் - சில்க் சீக்ரெட் சொன்ன நடிகை
சென்னை: Silk Smitha (சில்க் ஸ்மிதா) நடிகை சுலோச்சனா சில்க் ஸ்மிதா குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது.

தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.
தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார்.
தமிழ் மட்டுமல்ல பிறமொழிகளிலும் சூப்பர் ஸ்டார்: சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.
இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. ஒருமுறை மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கேரளா செல்ல நேரம் இல்லாததால் மோகன் லால் சென்னை வந்து சில்க்குடன் நடனம் ஆடிவிட்டது சென்றதெல்லாம் சில்க்கால் மட்டுமே படைக்க முடிந்த வரலாறு.
திராவிட பேரழகி சில்க் ஸ்மிதா: இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.

சில்க் குறித்து சுலோச்சனா: சில்க்குடன் நெருங்கி பழகியவர்கள், அவருடன் நடித்தவர்கள் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொள்வது வழக்கம். சில்க் பற்றி பேசுபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு வார்த்தைக்கூட சில்க் குறித்து தவறாக பேசியது கிடையாது. அந்த அளவுக்கு எல்லோரிடமும் நல்லவிதமாக பழகியவர் சில்க் ஸ்மிதா. இப்போது நடிகை சுலோச்சனாவும் சில்க் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
அவர் ஒரு குழந்தை மாதிரி: சுலோச்சனா பேசுகையில், "சில்க் பழகுவதற்கு ஒரு குழந்தை மாதிரி. உடைகள் தேர்வில் அவரை மாதிரி யாராலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான உடலமைப்பை கொண்டவர். அவருடைய ஆடைகளை அவரே தேர்வு செய்துதான் போடுவார். சரியாக படிக்கவில்லை என்றாலும் டிரஸ்ஸிங் சென்ஸில் மிகவும் கவனமாக இருப்பார்.
எதையும் கண்டுகொள்ளமாட்டார்: படப்பிடிப்பு தவிர ஓய்வு நேரத்தில் உட்காரும்போது எதை பற்றியும் சில்க் ஸ்மிதா கவலைப்படமாட்டார். ஆடைகள் எல்லாம் களைந்திருக்கும். நான் அவரிடம் உடல் மேல் ஒரு டவல் போட்டு உட்காருடினு சொல்வேன். அதற்கு சில்க் பரவாயில்லக்கா, பார்த்தால் பார்த்துட்டு போகட்டும்க்கா என ஒரு சின்ன குழந்தை மாதிரி பதில் அளிப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











