அஜித்துக்கு 3 குழந்தைகள்.. அஜித்தே சொன்ன விஷயம்.. சீக்ரெட் சொன்ன நடிகை சுமித்ரா!

சென்னை: நடிகை சுமித்ரா 70 மற்றும் 80 காலகட்டங்களில் முன்னணி ஹீரோயினாகவும் தொடர்ந்து தான் நாயகியாக நடித்த ஹீரோக்களுக்கே அம்மாவாகவும் நடித்து மாஸ் காட்டியவர். நடிப்பை நடிப்பாகவே பார்க்க வேண்டும் என்ற தெளிவுடன் இவர் இத்தகைய கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளார். மலையாளத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார் சுமித்ரா.

தொடர்ந்து தமிழிலும் அவளும் பெண் தானே என்ற படத்தில் விபச்சாரியாக நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இவரது முதல் படமே தமிழில் மிகப்பெரிய சக்சஸை கொடுத்த நிலையில், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிர்களுடன் இணைந்து தமிழில் நடித்துள்ளார்.

ajithkumar valimai movie sumithra


நடிகை சுமித்ரா: நடிகை சுமித்ரா 70 மற்றும் 80களின் முன்னணி நடிகையாக பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளவர். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ள சுமித்ரா, தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் அடுத்தடுத்து நடித்துள்ளார். மலையாளத்தில் இவரது முதல் படம் அமைந்தது. முதல் படத்திலேயே மிகச் சிறப்பான வரவேற்பையும் விருதுகளையும் பெற்ற சுமித்ராவிற்கு தமிழில் அதேபோன்று அமைந்தது. தமிழில் அவளும் பெண் தானே என்ற முதல் படத்தில் மூலம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தால் சுமித்ரா.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி: தொடர்ந்து சிவாஜி கணேசனுடன் அண்ணன் ஒரு கோயில் படத்திலும் மிகச் சிறப்பான கேரக்டரில் நடித்தார். நாயகியாக நடித்த ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார் சுமித்ரா. ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஜோடியாக மட்டுமில்லாமல் பணக்காரன், சிங்காரவேலன் என அம்மாவாகவும் நடித்துள்ளார் சுமித்ரா. கன்னடத்திலும் புனித் ராஜ்குமாரின் முதல் படமான அப்புவில் அவருக்கு அம்மாவாக நடித்த சுமித்ராவிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தொடர்ந்து ஐந்தாறு படங்களில் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

அஜித் கொடுத்த சிக்கன் சூப்: கோலிவுட்டில் அஜித்திற்கு வலிமை படத்தில் அம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள சுமித்ரா முன்னதாக அஜித்துடன் வீரம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இதனிடையே அஜித் குறித்த தன்னுடைய உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் சுமித்ரா பகிர்ந்துள்ளார். அஜித் ஒரு ஹீரோ மாதிரியே நடந்துக் கொள்ள மாட்டார் என்றும் நம் குடும்பத்தில் ஒருவராகவே பழகுவார் என்று சுமித்ரா தெரிவித்துள்ளார். சாப்பிட்டீர்களாக என்று நலம் விசாரிக்கும் அஜித், சூட்டிங்கின்போது 11 மணியளவில் சிக்கன் சூப்பை கொடுத்தனுப்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்திற்கு 3 குழந்தைகள்: செட்டில் யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் கவனிப்பார் என்றும் சுமித்ரா கூறியுள்ளார். அவர் தனக்கு மூன்று குழந்தைகள் என்றும் தன்னிடம் கூறுவார் என்றும் தன்னுடைய மனைவிதான் தன்னுடைய முதல் குழந்தை என்றும் அவருடன் சேர்த்தே தனக்கு 3 குழந்தைகள் என்று அஜித் கூறுவார் என்றும், அவர் அப்படியே ரஜினிகாந்த் போலத்தான் நடந்துக் கொள்வார் என்றும் சுமித்ரா பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X