»   »  தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் வெப் சீரியலில் நடித்துவரும் ஹீரோயின்!

தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் வெப் சீரியலில் நடித்துவரும் ஹீரோயின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சீரியலில் நடித்துவரும் சுனைனா- வீடியோ

சென்னை : நகுல் ஹீரோவாக நடித்த 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அந்தப் படத்தை தொடர்ந்து 'வம்சம்', 'சமர்' உட்பட பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் சுனைனா நினைத்தபடி முன்னணி நடிகையாக வரமுடியவில்லை.

இந்நிலையில், விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் ஆண்டனியின் 'காளி' படம் தனக்கு செகண்ட் இன்னிங்ஸை உருவாக்கித் தரும் என நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்தப் படம் தவிர, தனுஷை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் நடித்துள்ளார் சுனைனா.

Actress Sunaina acts in web series

இதற்கிடையே மற்றொரு தளத்தில் பயணத்தை துவங்கியுள்ளார் சுனைனா. 'திரு திரு துறு துறு' என்ற படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி, வெப் சீரீஸ் ஒன்றை இயக்குகிறார். இதில் சுனைனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் துவங்கி சத்தமில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வெப் சீரீஸில் நடிப்பது பற்றி வெளியே இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று இயக்குநரிடம் அன்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் சுனைனா. ஆனாலும், கத்திரிக்கை முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்.

English summary
Actress Sunaina starred in more than 10 Tamil films including 'Vamsam' and 'Samar'. In this case, Sunina is acting as heroine in web series.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X