ப்ளீஸ்..திருமணம் பற்றி பேசாதீங்க…என் படத்தைபத்தி பேசுங்க…கடுப்பான சுனைனா !

சென்னை : திருமணம் குறித்து வதந்திகள் பரவிவந்த நிலையில் நடிகை சுனைனா தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

தெலுங்கு படத்தின் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது ட்ரிப்,ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார், தமிழில் ஒரு சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

பல படங்களில்

பல படங்களில்

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சுனைனா அதைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, சமர், வன்மம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

கடைசியாக அவரது நடிப்பில் 2019ஆம் ஆண்டு சில்லுக்கருப்பட்டி படம் வெளியானது. அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பை பலரும் பாராட்டினார். தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சுனைனா. மேலும், ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நிறைய வாய்ப்புகள் வருகின்றன

நிறைய வாய்ப்புகள் வருகின்றன

இந்நிலையில் நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து அண்மையில் பேட்டி அளித்த சுனைனா, கடந்த ஓன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும், சில இயக்குநர்கள் என்னை மனதில் வைத்துக்கொண்டு கதைகளை எழுதி வருகிறார். இது எனக்கு மேலும் உச்சாகத்தை அளிக்கிறது என்றார்.

அதை பற்றி பேசாதீர்கள்

அதை பற்றி பேசாதீர்கள்

மேலும், பேசிய அவர், எனது திருமணம் பற்றி பேசுவதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள், தனது திரைப்படங்கள் பற்றி பேசுங்கள். இப்போதைக்கு தான் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X