மாட்டிக்கினாரு ஒருத்தரு.. அய்யோ நான் லாக் ஆகிட்டேன்.. சுனைனாவை கரம் பிடித்த அந்த அதிர்ஷ்டசாலி யாரு?

சென்னை: காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சந்தோசமான போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 35 வயதாகும் நடிகை சுனைனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதா என அந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் நடித்த சிவாஜி படத்தில் தான் சுனைனா முதல் முதலாக ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் சுனைனா நடித்த காட்சியை கடைசி நேரத்தில் இயக்குநர் ஷங்கர் வெட்டி எறிந்துவிட்டார்.

Sunaina Heroine

நகுலுக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நடித்த சுனைனா ஏகப்பட்ட இளைஞர்களின் கிரஷ்ஷாக மாறினார். இந்நிலையில், அவர் தனது துணையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.

சுனைனாவின் திரை வாழ்க்கை: கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, ட்ரிப், எஸ்டேட், லத்தீன் மற்றும் ரெஜினா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடிவாங்கிய மார்க்கெட்: சுனைனா நடிப்பில் வெளியான ஒரு சில படங்களைத் தவிர பல படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. முன்னணி நடிகையாக வளர முடியாமல் பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். கடைசியாக கோலிவுட்டில் அவர் நடித்த ட்ரிப், லத்தி மற்றும் ரெஜினா உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன. ரெஜினா படத்தின் தோல்விக்கு பிறகு அவருக்கு புதிதாக எந்தவொரு பட வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை. திறமையான நடிகையாக இருந்தாலும் சினிமாவில் அவரது மார்க்கெட் ரொம்பவே அடிவாங்கியது. சில்லுக்கருப்பட்டி, நீர்ப்பறவை படங்களில் எல்லாம் அவரது நடிப்பு வேறலெவலில் இருக்கும். கடைசியாக வெளியான இன்ஸ்பெக்ட்டர் ரிஷி வெப்சீரிஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

விரைவில் திருமணம்?: நடிகை சுனைனாவுக்கு 35 வயதாகிறது. பெரிதாக இதுவரை எந்த நடிகருடன் கிசுகிசுவில் எல்லாம் சிக்கவில்லை. ஆரம்பத்தில் நகுலுடன் தொடர்ந்து 2 படங்களில் நடித்த நிலையில், அவருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், உடனடியாக நகுலுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனைனா தனது கை மீது காதலரின் கையை வைத்தபடி எடுத்த போட்டோவை வெளியிட்டு லாக்ட் என்பதை உணர்த்த பூட்டு எமோஜியை பதிவிட்டுள்ளார்.

Sunaina Heroine

நடிகரா? தொழிலதிபரா?: நடிகை சுனைனா காதலில் விழுந்து விட்டார் என்றும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதா? காதலர் முகத்தை காட்டலாமே? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், யாராவது சினிமா நடிகரா? அல்லது தொழிலதிபரா? உங்களை கட்டிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாருன்னு சொல்லுங்க என சுனைனாவை ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். ரசிகர்களுக்காக விரைவில் அடுத்த அப்டேட்டை சுனைனா வெளியிடுவார் என தெரிகிறது. கடந்த ஒரு வருடமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து விட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X