ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? 2 குழந்தைகள் இருக்காம்? இரண்டாவது மனைவியாகும் சுனைனா!

சென்னை: தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சுனைனாவுக்கு, பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், ஆறு மாதத்திற்கு முன் தான் அவர் விவாகரத்து செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

உன் தலை முடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே என்ற ஒரே பாட்டின் மூலம் பிரபலமானவர் நடிகை சுனைனா. தமிழில் இவர் காதலில் விழுந்தேன் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த முதல் படத்திலேயே நல்ல பெயரை எடுத்தார். அந்த படத்தை தொடர்ந்து, மாசிலாமணி, அருள்நிதி ஹீரோவாக அறிமுகமான வம்சம் படத்தில் அவருக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக கச்சிதமாக நடித்து இருப்பார்.

Sunaina wedding

நடிகை சுனைனா: காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம் என தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த நடிகை சுனைனாவுக்கு படவாய்ப்புகள் குறைந்தன. இதைத் தொடர்ந்து சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படம் நடிகை சுனைனாவை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நியாபகப்படுத்தியது. விஷ்ணு விஷால் உடன் இணைந்து மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக சுனைனா நடித்து செம ஸ்கோர் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து பட வாய்ப்பு வராததால், தெறி படத்திலும், தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திலும் துணை நடிகையாக நடித்திருப்பார். சுனைனா நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக 'ரெஜினா' திரைப்படம் வெளியானது. ஆனால், இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அடுத்து அவர் நடிக்கும் படங்கள் குறித்து அறிவிப்பு எதுவும் இல்லை.

நிச்சயதார்த்தம்: இந்நிலையில், நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து தனது நிச்சயதார்த்தமென அறிவித்திருந்தார். இதையடுத்து, சுனைனாவின் வருங்கால கணவர், துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி என்பதும், அவர் துபாயில் பிரபல யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் என்றும், இந்த சேனலை 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கிறார்கள். இவர் அண்மையில், நடிகர் மம்மூட்டியுடன் நேர்காணல் நடத்தினார். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலானது.

இரண்டு குழந்தைகள்: கலித் அல் அமேரிக்க ஏற்கனவே சலாமா முகமத் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பாகவும், கலித் மற்றும் சலாமா இருவரும் இணந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் சலாமா மற்றும் கலித் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாகவும், கலித் தனது மனைவியுடனான அனைத்து போட்டோக்களையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X