சுனைனாவை காணவில்லை..போன் ஸ்விட்ச் ஆஃப்.. பரபரப்பான வீடியோ.. கடுப்பான போலீஸ்!
சென்னை : நடிகை சுனைனாவை காணவில்லை என்று பரவிய தகவலை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை சுனைனா. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
நடிகை சுனைனா : காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சுனைனா அதைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, சமர், வன்மம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு சில்லுக்கருப்பட்டி படம் வெளியானது. அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பை பலரும் பாராட்டினார்.
லத்தி படத்தில் : சமீப காலமாக கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் சுனைனா, கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு, அனைவர் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து ரெஜினா என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சுனைனா.
சுனைனாவை காணவில்லை : இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுனைனாவை காணவில்லை என்று 'ரெஜினா' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது அதில், சுனைனாவின் செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்டாரா என்ற கேள்வியுடன் அந்த வீடியோ வெளியாகி வைரலானது.
கடுப்பான போலீஸ் : இந்த வீடியோ பரவியதை அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்காக அந்த வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு நேரடியாக சென்று விசாரித்தனர். அப்போதுதான் இந்த வீடியோ, பட ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்தனர். இதனால், கடுப்பான போலீசார் இப்படி எல்லாமே ப்ரோமோஷன் என்று கூறிவிட்டு கடுப்பாகி அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











