தயவு செய்து நண்பனுக்கு உதவுங்கள்… சுனைனாவின் உருக்கமான வீடியோ !
சென்னை : நடிகை சுனைனா தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நண்பரின் சிகிச்சைக்கு உதவி கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சுனைனாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொற்றிலிருந்து மீண்டார்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசும் தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்துள்ளது. அண்மையில் நடிகை சுனைனாவும் கொரோனோவால் பாதிக்கபட்டு தற்போது தான் மீண்டுள்ளார்.

நண்பருக்கு உதவுகள்
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கபட்ட தன்னுடைய நண்பர் ஒருவருக்கு மருத்துவ உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுவாக நான் இந்த மாதிரி வீடியோவை போடுறது இல்லை. என்னோட பேஸ்புக், இன்ஸ்டால என்னை பாலோ பண்றவங்களுக்கு தெரியும். ஆனால் இது ஒரு எமர்ஜென்சி. என் நண்பர் அபினேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

உதவுங்கள்
அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது அவருடைய மேல்சிகிச்சைக்காக தேவைப்படும் நிதியை தயவு செய்து கொடுத்து உதவுங்கள். நானே சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதால் அதன் வலி எனக்கு தெரியும். சிறிய தொகையாக இருந்தாலும் பெரிய தொகையாக இருந்தாலும் உதவி செய்து அவருக்கு உதவிகள், நிதியை கொடுத்து அவரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஷேர் செய்து வருகின்றனர்
மேலும், இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் என்று கூறியுள்ள சுனைனா, பணம் செலுத்த வேண்டிய வங்கியின் லிங்கையும் இணைத்துள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் அவருக்காக இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











