Actress Sunaina: துபாய் யூடியூபரை மணக்கும் சுனைனா?.. இந்தியா வந்த மாப்பிள்ளை!
சென்னை: நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து மாசிலாமணி, தெறி, சமர், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தன்னுடைய அழுத்தமான கேரக்டர்களால் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்தார் சுனைனா.
தொடர்ந்து சில தினங்களிலேயே தனக்கு நிச்சயதார்த்தம் நிறைவடைந்து விட்டதாக புகைப்படம் மூலம் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னுடைய வருங்கால கணவர் குறித்து அவர் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் அவர் துபாயை சேர்ந்த பிரபல யூடியூபரை திருமணம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை சுனைனா: நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதல் படமான காதலில் விழுந்தேன் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சுனைனா. தொடர்ந்து அவருடன் மாசிலாமணி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நீர்ப்பறவை, தெறி, வம்சம், நம்பியார், சமர் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சுனைனா நிச்சயதார்த்தம்: தன்னுடைய அழகு மற்றும் சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவர் சுனைனா. இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய திருமணம் குறித்து அறிவிப்பை சுனைனா சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் அறிவித்திருந்தார். மேலும் தான் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படததையும் பகிர்ந்திருந்தார். ஆனால் தன்னுடைய வருங்கால கணவர் குறித்து இந்து தகவலையும் சுனைனா வெளிப்படுத்தவில்லை.
துபாய் யூடியூபருடன் திருமணம்: இந்நிலையில் துபாயை சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்பவரை சுனைனா திருமணம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது திருமணத்திற்காக துபாயிலிருந்து இவர் இந்தியா வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரும் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை குறிக்கும்வகையில் கைகளை பிணைத்த புகைப்படத்தைதான் பகிர்ந்திருந்தார். முன்னதாக சுனைனாவும் இதே போன்ற புகைப்படத்தைதான் பகிர்ந்திருந்தார்.

மம்முட்டியுடன் நேர்காணல்: இந்நிலையில் அவரைதான் சுனைனா திருமணம் செய்ய உள்ளதாக கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயை சேர்ந்த அல் அமேரி, யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஏராளமான பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது சேனலை 3 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். சமீபத்தில் மம்முட்டியுடனான இவரது நேர்காணல், சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இவர்தான் சுனைனாவை திருமணம் செய்வாரா என்பது குறித்து விரைவில் சுனைனா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











