நிலா நிலா ஓடிவா.. வெப்சீரீஸ் ப்ளூபர்ஸ்.. இன்ஸ்டாவில் வெளியிட்ட சுனைனா..

சென்னை : நடிகை சுனைனா தான் நடித்த வெப் தொடரின் ப்ளூபர்ஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஹீரோயின்கள் இளைஞர்களை கவரும் வண்ணம் உள்ளனர். அனைத்து வயதினரையும் கவரும் ஹீரோயின்கள் குறைவுதான் என்றாலும் ஹோம்லி லுக் உள்ள ஹீரோயின்களை எல்லாருக்கும் பிடிக்கும் அப்படி நம் அனைவரையும் கவர்ந்தவர்தான் சுனைனா!

 Actress sunaina share bloopers from her web series

சில்லுக்கருப்பட்டி படத்தில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு கதாபாத்திரமாக சுனைனா நடித்தார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

2016ல் வெளியான விஜயின் தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். நீர்பறவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்தார். பின்னர் அந்த படத்திற்காக சிறந்த நடிககைக்கான பிலிம் பேர் விருதையும் வாங்கினார்.

 Actress sunaina share bloopers from her web series

சுனைனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது நிலா நிலா ஓடிவா என்ற வெப் தொடரின் ப்ளூபர்ஸ் ஆகும். 2018 ஆம் ஆண்டு வியூ என்கிற தளம் மூலம் வெளியானது இந்த தொடர்.

 Actress sunaina share bloopers from her web series

வேம்பையர் போன்ற திகில் அம்சங்கள் உள்ள இந்த தொடர் நந்தினி ஜெ.ஸ் என்பவரால் இயக்கப்பட்டது. பிரபலங்கள் பலர் இந்த லாக்டவுன் நேரத்தில் தங்களில் போட்டோக்கள், வீடியோக்கள் என பதிவிட்டு வருகையில், சுனைனா தான் நடித்த வெப் தொடரின் ப்ளூபர்ஸ்களை வெளியிட்டது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X