எலான் மஸ்க் இதையெல்லாமா பார்க்கப்போறாரு.. "அதுல"தான் பிஸியா இருப்பாரு.. ஏக்கத்தில் சுனைனா!
சென்னை: தன்னுடைய கிளாமர் போட்டோவை பார்த்து உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் பெயரில் வாவ் சொல்லியிருக்கும் டிவிட்டை பார்த்து சிரித்து மகிழ்ந்துள்ளார் சுனைனா.
தெலுங்கு படத்தின் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து வந்த சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, வன்மன்ம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

எரியும் கண்ணாடி
கடைசியாக அவரது நடிப்பில் 2019ஆம் ஆண்டு சில்லுக்கருப்பட்டி படம் வெளியானது. அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சுனைனா.

ஒரு பக்கம் சட்டையை கழட்டி
படங்களில் கிளாமர் காட்டாவிட்டாலும் சமூக வலைதளங்களில் எக்குதப்பான போட்டோக்களை போட்டு உசுப்பேற்றி வருகிறார் சுனைனா. அந்த வகையில் இன்று பிளாக் அன்ட் வொய்ட்டில் ஒரு பக்கம் சட்டையை கழட்டி காண்பித்தப்படி போஸ் கொடுத்துள்ளார் சுனைனா.

வாவ் சொன்ன எலான் மஸ்க்
இந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சுனைனா. சுனைனாவின் இந்த கிளாமர் போட்டோவுக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் வாவ் போட்டிருப்பதாக டிவிட் பதியப்பட்டுள்ளது.

ரொம்ப பிஸியாக இருப்பார்
இதனை பார்த்த சுனைனா, ஹாஹாஹா என சிரித்துள்ளார். மேலும் எலான் மஸ்க் ஸ்பேஸ் தொடர்பான விஷயத்திலும் டெல்ஸா கார் விஷயத்திலும் ரொம்பவே பிஸியாக இருப்பார் என தெரியும் என பதிவிட்டுள்ளார்.

வெளியேறிய எலான் மஸ்க்
இதையெல்லாமா அவர் பார்க்க போகிறார் என்ற ரீதியில் இதனை குறிப்பிட்டுள்ளார் சுனைனா. எலான் மஸ்க் சில காலத்திற்கு டிவிட்டரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக கடந்த 2ஆம் தேதி டிவீட் செய்து டிவிட்டரில் இருந்து வெளியயேறினார்.

செவ்வாய் கிரகத்திற்கு..
எலான் மஸ்க்கின் டிவிட்டை பார்த்த பலர், அவர் செவ்வாய் கிரகத்திற்கு சென்றிருக்கலாம் எனவும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் பெயரில் சுனைனாவின் போட்டோவுக்கு கமெண்ட் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











