'அப்ப நான் நடிக்கிற படத்தை யார் முடிப்பாங்க? பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்பது பற்றி பிரபல நடிகை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பது பற்றி பிரபல நடிகை விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இந்தியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தியில் இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

கமல்ஹாசன்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். 4வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்க உள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 4 ஆவது சீசன், கொரோனாவால் தாமதமானது. ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில், இம்முறை நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

நடிகர் நாகர்ஜுனா
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4-க்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. ஒவ்வொரு நாளும் ஒரு பிக்பாஸ் சீசன் 4 குறித்த புதிய புரமோ வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான புரமோவில் நாகர்ஜுனா மூன்று கெட்டப்களில் தோன்றி பேசுகிறார். வயதானவர், இளைஞர், நடுத்தர வயதுக்காரர் என தோற்றங்கள் என வரும் அந்த புரமோ அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4
ஆகஸ்ட் 30, 2020 முதல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை சுனைனா
இந்நிலையில், அதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. நடிகைகள் சுனைனா, அதுல்யா, கிரண், ரம்யா பாண்டியன், வித்யூலேகா ஆகியோர் இதில் இடம்பெற உள்ளதாகக் கூறப்பட்டது. இதை பிரபல நடிகை சுனேனா மறுத்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

யார் முடிப்பார்கள்?
'எந்த ரியாலிட்டி ஷோவிலும் நான் பங்கேற்க விரும்பவில்லை. அதில் பங்கேற்றால், நான் ஒப்பந்தமாகி உள்ள படங்களை யார் முடித்துக் கொடுப்பார்கள்? என்று கேட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ், நல்ல முடிவு என்று கூறியுள்ளனர். நடிகை சுனேனா இப்போது 'ட்ரிப்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், யோகிபாபு, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். அடுத்து நகுலுடன், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











