கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தார் நடிகை சுனைனா !
சென்னை : பிரபல நடிகை சுனைனா கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இரண்டுவார ஓய்வுக்கு பிறகு தற்போது நெகட்டிவாகி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோரப்பிடியில்
கொரோனாவின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து விட்டது. ஆனால் இரண்டாவது அலையில் இருந்து மீள்வதற்காக தனது ஆவேசப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
Recommended Video

6,150 பேர் பாதிப்பு
தமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 6,150 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,31,291 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா உறுதி
நடிகை சுனைனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சுனைனா. மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துகளை எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது எடுத்த டெஸ்ட்டி நெகட்டிவ் என வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மீண்டார்
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக பதிவிட்டுள்ளார். மேலும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். கொரோனாவின் தாக்கம் விரைவில் குறையும். இது அனைவருக்கும் மிகவும் தேவையான மன நிதானத்தை அளிக்கிறது என்றும் நான் நம்புகிறேன். தொற்றுநோய்க்கு எதிராக போராடும் அனைவரின் நலனுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், மேலும் அவர்கள் குணமடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











