»   »  பிரபல விமர்சகர் பலாத்காரம் செய்யப் பார்த்தார்: நடிகை பரபர புகார்

பிரபல விமர்சகர் பலாத்காரம் செய்யப் பார்த்தார்: நடிகை பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
விமர்சகர் பலாத்காரம் செய்ய பார்த்தார் : நடிகையின் வாக்குமூலம்- வீடியோ

ஹைதராபாத்: சினிமா விமர்சகர் கத்தி மகேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் நடிகை சுனிதா.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

அவர் போராடிய பிறகே பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என்று மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் அறிவித்துள்ளது.

வியப்பு

வியப்பு

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இல்லாத ஸ்ரீ ரெட்டி பல நடிககைள் பேச பயப்படும் விஷயத்தை பளிச்சென்று கூறி போராடி வெற்றியும் கண்டுள்ளது பிரபலங்களை வியக்க வைத்துள்ளது.

மகேஷ்

மகேஷ்

ஸ்ரீ ரெட்டியால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மற்றொரு நடிகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சுனிதா சினிமா விமர்சகர் கத்தி மகேஷுக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அழைப்பு

அழைப்பு

ஃபேஸ்புக் மூலம் எனக்கு மகேஷை தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவரை பாராட்ட போன் செய்தேன். அவர் என்னை அவரின் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அவர் வீட்டிற்கு சென்றபோது வேறு விதமாக அவர் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது என்று டிவி சேனல் ஒன்றிடம் கூறியுள்ளார் சுனிதா.

புகார்

புகார்

நான் மகேஷின் வீட்டிற்கு சென்றபோது அவர் கதவை பூட்டிவிட்டு என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் என்னை அடிக்கவும் செய்தார். மேலும் ரூ. 500 கொடுத்தார். இதற்கு எல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது என்கிறார் சுனிதா.

வழக்கு

சுனிதாவின் புகாரை ஏற்க மறுத்துள்ளார் மகேஷ். என் மீது பொய்யான புகார் தெரிவித்துள்ள சுனிதா மற்றும் அவரை தூண்டிவிட்ட கொனிடெலா புரொடக்ஷன்ஸ் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் என்று ட்வீட்டியுள்ளார் மகேஷ்.

Read more about: complaint புகார்
English summary
Character artist Sunitha said that film critic Mahesh Kathi tried to rape her when she went to his house on invitation. Mahesh denied this allegation and decided to file a defamation case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X