பற்றி எரியும் பஞ்சாயத்து.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு சீரியல் நடிகை கொடுத்த சர்ட்டிஃபிக்கேட் தெரியுமா?
சென்னை: பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்த சம்பவம் பெரிய பரபரப்பை உண்டு செய்தது. சமீபத்தில்தான் மகளிர் ஆணையத்தில் இரண்டு பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்ற கேள்வி பலரிடமும் எழுந்த சூழலில் மாதம்பட்டி பற்றி நடிகை சுனிதா பேசியிருக்கும் விஷயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் வெகு பிரபலமான சமையல் கலைஞரும்கூட. பெரிய வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் ரங்கராஜ்தான் சமையல் செய்வார். இவை தவிர்த்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார். இப்படி பல அவதாரங்களை கொண்டிருக்கும் அவரை சுற்றி கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை எழுந்திருக்கிறது.
என்ன சர்ச்சை?: அதாவது அவர் முதலில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தகப்பனாக இருக்கிறார். ஆனால் திடீரென பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின. ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே அவர் இன்னொரு கல்யாணம் செய்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஃபோட்டோஸ் வெளியான சில நாட்களில் முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டார்.

ஜாய் அளித்த புகார்: இப்படிப்பட்ட சூழலில்தான் கொதிப்படைந்த ஜாய் கிரிஸில்டா; மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும், அவர் மிது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்தப் புகார் அளிக்கப்பட்டதிலிருந்து பலரும் ரங்கராஜுக்கு எதிரான நிலைப்பாட்டினையே எடுக்க ஆரம்பித்தார்கள். நீதிமன்றமும் அவருக்கு செக் வைத்து அனுப்பிவைத்தது.
நடந்த விசாரணை: சமீபத்தில்தான் அவரிடமும், ஜாயிடமும் மகளிர் ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்த விசாரணைக்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்தார் ரங்கராஜ். அவருடன் முதல் மனைவி வந்ததற்கும் பலர் விமர்சித்தார்கள். இப்படிப்பட்ட பெண்களால்தான் ஆண்கள் தைரியமாக துரோகத்தையும், தவறையும் செய்கிறார்கள் என்று விளாசினார்கள். இந்நிலையில் ரங்கராஜ் பற்றி நடிகை சுனிதா பேசியிருக்கும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சுனிதா சொன்னது: அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தயாரிப்பில் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அவர் ரொம்பவே ஸ்வீட்டானவர். எனக்கு தெரிந்து மீடியாவில் வேலை செய்யும் ஆட்களிலேயே ரங்கராஜ்தான் ரொம்பவே ஜென்யூனான ஆள்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரங்கராஜின் ஆதரவாளர்கள் இந்த நேரத்தில் சுனிதா இப்படி பேசியிருப்பது ரொம்பவே முக்கியமானது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











