மிரட்டும் கொரோனா வைரஸ்.. இங்க பாதுகாப்பில்லை.. குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்த பிரபல நடிகை!
சென்னை: கொரோனா வைரஸிடமிருந்து தப்புவதற்காக பிரபல நடிகை கணவர் மற்றும் குழந்தைகளுடன்
அமெரிக்காவுக்கு பறந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன். இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு வெளியான மதுர ராஜா என்ற மலையாளப் படத்தில் நடித்தார் சன்னி லியோன். தற்போது லாக்டவுன் என்பதால் தொடர்ந்து போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு
கிறங்கடித்து வருகிறார் சன்னி.

பாதுகாப்புக்காக
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் திடீரென தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பறந்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதுகாப்புக்காக அமெரிக்கா செல்வதாக தெரிவித்துள்ளார்.

மூன்று குழந்தைகள்
சன்னி லியோன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். சன்னி லியோனும் அவரது கணவரும் நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை 2017ஆம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதனை தொடர்ந்து வாடகை தாய் மூலம் அஷர் சிங், நோவா சிங் என்ற இரண்டு குழந்தைகளை பெற்றனர்.

பண்ணை வீடு
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த சன்னி லியோன் பாதுகாப்பு கருதி, குழந்தைகள் மற்றும் கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.

குழந்தைகளுடன்..
இதுதொடர்பாக தனது பண்ணை வீட்டின் தோட்டத்தில் குழந்தைகளுடன் இருந்தப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் சன்னி லியோன். அன்னையர் தினத்தன்று, அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியப்படி இன்ஸ்டாகிராமில் தான் அமெரிக்காவில் இருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.

கண்ணுக்கு தெரியாத கொலையாளி
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள போஸ்ட்டில் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழ்க்கையில் நீங்கள் குழந்தைகளைப் பெறும்போது உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நல்வாழ்வு பின் தள்ளப்படும். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளை இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளி கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உணர்ந்தோம்.

மிஸ் யூ அம்மா
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரகசிய தோட்டத்திலிருக்கும் எங்கள் வீடு. என் அம்மா நான் இதைத்தான் செய்ய வேண்டும் என விரும்பியிருப்பார் என்று எனக்குத் தெரியும். மிஸ் யூ அம்மா. மகிழ்ச்சியான அன்னையர் தினம்!" என கூறி உள்ளார்.
Recommended Video

நல்ல வைப்ரேஷன்
அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் இருப்பதை சன்னி லியோனின் கணவரான டேனியல் வெப்பரும் உறுதி செய்திருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் வீட்டின் தோட்டத்தில் இருந்தப்படி செல்பி ஒன்றை ஷேர் செய்திருக்கும் டேனியல் நல்ல வைப்ரேஷனை பெறுவதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











