நாரு நாரா கிழிச்சி பார்த்து இருக்கியா? வெளியானது சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ டீசர்!

சென்னை : சன்னி லியோன் சதீஷ் நடிப்பில் உருவான ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். பின்னர், அதிலிருந்து வெளியேறிய அவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர், பாலிவுட்டில் கிளாமர் குயினாக நடிக்கத் தொடங்கிய சன்னி லியோன் தற்போது ஆக்‌ஷன் நாயகியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் முதல்முறையாக தமிழில் நடிக்கும் திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்' அந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் காமெடி நடிகர்கள் சதீஷ், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மூன்று கதாபாத்திரத்தில்

மூன்று கதாபாத்திரத்தில்

ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோன் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது கதாபாத்திரத்துக்காக பல ஆய்வுகளை சன்னி லியோன் மேற்கொண்டுள்ளார். இது, வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் ஒரு பேய் படமாகும் இதில், திகில், நகைச்சுவை கலந்தது. இந்தப் படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

ஓ மை கோஸ்ட் டீசர்

ஓ மை கோஸ்ட் டீசர்

இந்நிலையில், ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில்,மாயசேனாவை நீ பார்த்து இருக்கிறாயா என யோகிபாபுவின் குரலில் டீசர் தொடங்குகிறது. கவர்ச்சி சொட்ட சொட்ட சன்னி லியோன் மிரட்டலாக சிம்மாசனத்தில் அமர்கிறார். இதையடுத்து, கையில் வாலுடன் நான் ஆடி பார்த்து இருப்பா, பாடி பார்த்து இருப்பா, நாரு நாரா கிழிச்சி பார்த்து இருக்கியா? வாங்கடா என மிரட்டி உள்ளார்.

டிரெண்டிங்கில்

டிரெண்டிங்கில்

வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டீசரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது டீசர் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X