வெப் சீரிஸில் நடிகை சன்னி லியோன்... அதுக்கு சரிபட்டு வருவாரான்னு தெரியலையே..?
Recommended Video

சென்னை: நடிகை சன்னி லியோன், காமெடி வெப்சீரிஸில் நடிக்க இருக்கிறார்.
பாலியல் படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன், அதை விட்டுவிட்டு இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பரபரப்பு நடிகை
மலையாளத்தில் ரங்கீலா, மதுரராஜா படங்களில் நடித்த இவர், தமிழில் ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அடுத்து வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள். படங்கள், பாடல்களை தாண்டி சன்னி லியோன், சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

தத்தெடுத்த குழந்தைகள்
இவரது கணவர் டேனியல் வெபர். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர், நான் செய்யும் பல விஷயங்கள் சமூக வழக்கத்துக்கு எதிரானவைதான் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார் சன்னி லியோன்.

காமெடி வருமா?
இது காமெடி தொடர். 'இந்த தொடர் பற்றி நான் அதிகம் பேச முடியாது. ஆனால், இதில் பங்கேற்க இருப்பதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். காமெடி எனக்கு எப்போதும் பிடிக்கும். மற்றவர்கள் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும் செயலை செய்து நல்ல விஷயம்' என்று தெரிவித்துள்ளார் சன்னி லியோன். ஆனால், இவருக்கு காமெடி சரியாக வருமா என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.

அனாதை இல்லத்துக்கு
இந்தத் தொடரில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் தனக்கான சம்பளத்தை மும்பையில் உள்ள செயின்ட் கேத்தரின்ஸ் அனாதை இல்லத்துக்கு கொடுக்க இருக்கிறார் சன்னி. அவரும் அவர் கணவர் டேனியல் வெபரும் அடிக்கடி இந்த இல்லத்துக்குச் சென்று வருவது உண்டு. இதையடுத்துதான் அவர்களுக்கு குழந்தையை தத்தெடுக்கும் எண்ணம் வந்தது. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











