இப்படியும் கூட விவாகரத்து நடக்குமா?: இந்த நடிகையை பார்த்து தெரிஞ்சுக்கோங்க

By Siva

திருவனந்தபுரம்: தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

மலையாள திரையுலகில் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் சுரபி லட்சுமி. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கடந்த ஆண்டு பெற்றார்.

அவரின் தனிப்பட்ட வாழ்வில் புயல் வீசியுள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

சுரபிக்கும், விபின் சுதாகர் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

பிரிவு

பிரிவு

கருத்து வேறுபாடு காரணமாக சுரபியும், விபினும் கடந்த ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்ந்தனர். இதற்கிடையே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விவாகரத்து

விவாகரத்து

சுரபி, விபினுக்கு கடந்த 12ம் தேதி விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விபின் சுரபியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் போட்டுள்ளார்.

சுரபி

சுரபி

சுரபியும், விபினும் ஒருவரை பற்றி மற்றொருவர் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. விவாகரத்திற்கான காரணத்தை சொல்ல மறுத்துவிட்டார் சுரபி. இனி நானும், விபினும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்கிறார் சுரபி.

கிசுகிசு

கிசுகிசு

சுரபிக்கும் சினிமா பட தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையே தொடர்பு உள்ளது என்ற வதந்தி தீயாக பரவியது. இருவரும் சேர்ந்து ஹோட்டல் ஒன்றில் அடித்த கூத்தால் நிர்வாகத்தினரே அவர்களை வெளியேற்றியதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X