அடடா இது என்ன பெண்ணா.. இல்லை பொம்மையா.. சுரபியின் ஸ்விம்மிங்பூல் போட்டோசூட் !
ஹைதராபாத் : தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி இப்பொழுது தெலுங்கில் மிக பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சுரபி அனைவருக்கும் பிடித்தமான சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கவர்ச்சி காட்டாத நடிப்பும், மனதை கொள்ளை கொள்ளும் அழகு, அனைவருக்கும் பிடிக்கும் முகம் என திரைப்படங்களில் அசத்தி வரும் சுரபி தமிழில் வெளியான "இவன் வேற மாதிரி" திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை தொடர்ந்து கொள்ளை கொண்டு வரும் இவர் இப்பொழுது ஸ்விம்மிங்பூலில் இருந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பலரையும் ரசிக்க வைத்ததோடு வர்ணிக்கவும் வைத்திருக்கிறது.

தொடர்ந்து குடும்பப்பாங்கான
நேற்று அறிமுகமான ஹீரோயின்கள் கூட கவர்ச்சி காட்டி தங்களது அடுத்தடுத்த திரைப்படங்களின் வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி காட்டாத வேடங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்து சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுரபி.

வேலையில்லா பட்டதாரி
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற "இவன் வேற மாதிரி" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட சுரபி அதைத் தொடர்ந்து தமிழில் வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டார்.

அடங்காதே
இவ்வாறு தமிழில் பிரபலமானதை தொடர்ந்து தெலுங்கிலும் பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமாக உள்ள இவருக்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து "அடங்காதே" திரைப்படத்தில் நடித்துள்ளார்.

க்யூட்டான புகைப்படங்கள்
இவ்வாறு தனது திரைப்படங்களில் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் சுரபி அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வெளியிடும் க்யூட்டான புகைப்படங்கள் வைரலாவதோடு ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

அழகான பொம்மை போல
இந்நிலையில் தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் பிங்க் கலர் உடையில் தேவதை போல மலர்களாலான கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு அழகான பொம்மை போல நீச்சல் குளத்தின் நடுவில் உட்கார்ந்து கொண்டு மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சுரபியை பலரும் வர்ணித்து வரும் நிலையில் நடிகை மாளவிகா மேனன் "நீங்கள் ஏஞ்சல் போல இருக்கின்றீர்கள்" என பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











