ஹாட்டா இருக்கேனா? இல்லையா? பாத் டப்பில் குளிக்கும் போட்டோவை போட்டு கதிகலங்க வைக்கும் சீனியர் நடிகை!
சென்னை: மாஸ்டர் படத்தில் நடித்த சீனியர் நடிகை சுரேகா வாணியின் ஹாட் பாத் டப் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாலிவுட் படமான சண்டாள் திரைப்படத்தில் அறிமுகமான சுரேகா வாணி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கிய அவர், தற்போது பாத் டப்பில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

நீக்கப்பட்ட காட்சி
தளபதி விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்த சுரேகா வாணி, மாஸ்டர் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான டெலிடட் சீனில் அவரது காட்சி இடம்பெற்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

சீனியர் நடிகை
கடந்த 2010ம் ஆண்டு தனுஷ், ஜெனிலியா நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சுரேகா வாணி. அதன் பிறகு விக்ரமின் தெய்வ திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், உதயம் என்.எச் 4, ஜில்லா, பிரம்மன், வந்தா ராஜாவாதான் வருவேன், விஸ்வாசம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பாத் ரோப்
மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிக்கு பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள் சுரேகா வாணியின் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர். அவரும் அதில் ஏகப்பட்ட போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் குளிக்கப் போகிறேன் என பாத் ரோப் அணிந்து கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

கருப்பு பிகினியில்
அதனை தொடர்ந்து மொட்டை மாடி நீச்சல் குளத்தில் கருப்பு பிகினியில் படு கவர்ச்சியாக குளிக்கும் புகைப்படங்களை தனது பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் சுரேகா வாணி. சுரேகா வாணியின் போட்டோவுக்கு கீழே ஏகப்பட்ட ஹாட் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

43 வயசு
43 வயதாகும் சீனியர் நடிகை சுரேகா வாணியின் நீச்சல் குள புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த வயதிலும் இவர் இந்த அளவுக்கு ஹாட்டா இருக்காரே என்றும் வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும், வித விதமாக போட்டோக்களை போடவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

பாத் டப்பில்
அந்த கோரிக்கைகளை ஏற்று சுரேகா வாணியும் தற்போது பாத் டப்பில் குளிக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து நான் ஹாட்டா இருக்கேனா இல்லையா என கேப்ஷன் கொடுத்து நெட்டிசன்களை கதற விட்டு வருகிறார். ஏதோ ஒரு ரெசார்ட்டில் நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணும் போட்டோக்களைத் தான் அவர் ஷேர் செய்து வருகிறார்.

ஃபேக் ஐடியா
இது உண்மையாகவே சுரேகா வாணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தானா? என்கிற சந்தேகமும் ஒரு சில ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ப்ளூ டிக் இல்லாமல் இருப்பதால் வேறு யாராவது சுரேகா வாணியின் இது போன்ற போட்டோக்களை ஷேர் செய்கிறார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ரொம்ப ஹாட்டா இருக்கீங்க, செம அழகு என சிலர் ஜொள்ளு விட்டாலும் கெழவிக்கு கொஞ்சம் ஓவர் தான் என சில நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











