47 வயதிலும் குறையாத அழகு.. பிகினியில் பீச்சில் ஆட்டம் போட்ட நடிகை சுரேகா வாணி!

சென்னை:ஒரு சில நடிகைகளுக்கு வயசு ஏறஏறத்தான் அழகுகூடும் போல, சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும், நதியா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள், முன்பைவிட இப்போது தான் அழகாக இருக்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர் தான் நடிகை சுரேகா வாணி, இவருக்கு 47 வயதாகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவிற்கு அழகு குறையாமல் தனது உடல் அழகை பேணி காத்து வருகிறார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, 2005ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தனுஷ் மற்றும் ஜெனிலியா நடித்த உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான, அதன் பின், சித்தார்த் மற்றும் அமலா பால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதன் பின் விக்ரம் என அடுத்தடுத்த படத்தில் நடித்து தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

surekha vani bikini video

கணவர் உயிரிழந்தார்: நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா 2019ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார். கணவர் இறந்த பின், மகளுக்காக ஓய்வே இல்லாமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர், தனது மகளுடன் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு வேண்டுதலை நிறைவேற்றினார். இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் மீண்டும் திருப்பதிக்கு தனது மகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

surekha vani bikini video

பிகினியில் கடற்கரையில் ஆட்டம்: இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் அவ்வப்போது விதவிதமான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, கடற்கரையில் கருப்பு பிகினியில் கடல் அலையில் ஆட்டம் போட்டுள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த இணையவாசிகள், 47 வயதிலும் இந்த அழகா என்றும், சினிமாவிலும் இந்த கிளாமரை காட்டினால் நன்றாக இருக்கும் என்று நடிகை சுரேகா வாணியின் வீடியோவிற்கு கீழ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

surekha vani bikini video

இரண்டாவது திருமணமா: நைட் பார்ட்டியில் தனது ஆண் நண்பரான பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தெலுங்கு திரைத்துறையில் பெரும் பேசுபொருளானது. சுரேகா வாணியும் கேபி சௌத்ரியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவியது. இணையத்தில் பரவிய இந்த வதந்தி குறித்து, நடிகை சுரேகா வாணி எந்தவிதமான மறுப்பையும் தெரிக்காததால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

surekha vani bikini video

அதுமட்டுமில்லாமல் போதைப் பொருள் வழக்கிலும் இவரிடமும் விசாரணை நடத்தப்படும் என சொல்லப்பட்ட நிலையில், சௌத்திரியை தயாரிப்பாளர் என்ற முறையில் தான் எனக்கு தெரியும். மற்றபடி போதை வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேவையில்லாமல் இந்த பிரச்சினையில் என்னையும் என் மகளையும் இழுக்க வேண்டாம் என வீடியோவில் வெளியிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X