தலையை சாய்த்து ஸ்டைலா ஒரு க்ளிக்… இந்த வயசிலும் கலக்கும் சுரேகா வாணி!
சென்னை : தமிழ் , தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி.
தமிழிலில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தி வருகிறார்
இணையத்தில் புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை பெறுவதில் ஆர்வம் கொண்ட சுரேகா வாணி, தற்போது ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழில் அறிமுகம்
தனுஷின் உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் சுரேகா வாணி, அடுத்ததாக காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாக நடித்திருப்பார். பின்னர் தெய்வமகன் படத்தில் எம்.எஸ். பாஸ்கருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

தெலுங்கில் அதிக வாய்ப்பு
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, 2005ம் ஆண்டில் இருந்து இன்று வரை பல்வேறு படங்களில தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் படங்களை விட தெலுங்கில் அதிக வாய்ப்புகள் வருகின்றன. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

வில்லனின் மனைவியாக
சுரேகா வாணி அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வில்லனின் மனைவியாக நடித்து இருக்கிறார். மேலும் விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அந்த காட்சி படத்தில் வரவில்லை. ஆனால், அமேசான் பிரைமில் படம் வெளியான போது இவர் நடித்த காட்சி இடம் பெற்றுள்ளது.
Recommended Video

க்யூட் போட்டோ
சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், அண்மையில் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர், பிங்க் கலர் உடையில் முடியை அழகாக வெட்டி விட்டு தலையை சாய்த்து க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கும் சுரேகா வாணியின் ரசிகர்கள் வழக்கம் போல லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











