40 பிளஸ் வயசிலும் என்னவொரு ஹாட்னஸ்.. தல – தளபதி படங்களில் நடித்து மிரட்டும் நடிகை சுரேகா வாணி!

சென்னை: தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படங்களில் நடித்த சீனியர் நடிகை சுரேகா வாணியின் நீச்சல் குள போட்டோஸ் இணையத்தை சூடேற்றி வருகிறது.

ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த சுரேகா வாணி பாலிவுட் படமான சண்டாள் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில்

தமிழில்

கடந்த 2010ம் ஆண்டு தனுஷ், ஜெனிலியா நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சுரேகா வாணி. அதன் பிறகு விக்ரமின் தெய்வ திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், உதயம் என்.எச் 4, ஜில்லா, பிரம்மன், வந்தா ராஜாவாதான் வருவேன் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யுடன்

விஜய்யுடன்

தளபதி விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்த சுரேகா வாணி, கடந்த மாதம் வெளியான மாஸ்டர் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான டெலிடட் சீனில் அவரது காட்சி இடம்பெறவே படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

விஸ்வாசம் படத்தில்

விஸ்வாசம் படத்தில்

அதே போல கடந்த 2019ம் ஆண்டு வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு, நான் தல - தளபதி ரசிகை என தெரிவித்த சுரேகா வாணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

குளிக்கப் போறேன்

குளிக்கப் போறேன்

தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து போஸ்ட் போட்டு வரும் சுரேகா வாணியை மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிக்கு பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். நீச்சல் குளத்தில் குளிக்கப் போகிறேன் என டவல் கட்டிக் கொண்டு சுரேகா கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் பிகினியில் போட்டோ போடுங்க என கோரிக்கை வைத்தனர்.

கருப்பு பிகினியில்

கருப்பு பிகினியில்

மொட்டை மாடி நீச்சல் குளத்தில் கருப்பு பிகினியில் படு கவர்ச்சியாக நீச்சல் அடிக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் சுரேகா வாணி. சுரேகா வாணியின் போட்டோவுக்கு கீழே ஏகப்பட்ட ஹாட் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

40 பிளஸ்

40 பிளஸ்

கிட்டத்தட்ட 43 வயதாகும் சீனியர் நடிகை சுரேகா வாணியின் நீச்சல் குள புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த வயதிலும் இவர் இந்த அளவுக்கு ஹாட்டா இருக்காரே என்றும் வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும், வித விதமாக போட்டோக்களை போடவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X