“என் உடம்பை அங்குலம் அங்குலமாக பார்க்க விரும்பினார்”.. தமிழ் இயக்குநர் மீது பிரபல நடிகை புகார்

தேசிய விருது பெற்ற பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்தி நடிகை சுர்வீர் சாவ்லா கூறியுள்ளார்.

சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்க, தேசிய விருது பெற்ற பிரபல தமிழ் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் எல்லா துறைகளிலும் இருந்து வருகிறது. குறிப்பாக திரைத்துறையில் இது அதிகம். படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நடிகைகளுக்கு இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பழக்கம், சமீபகாலமாக தான் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. மீ டூ இயக்கத்தின் மூலம் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுர்வீன் சாவ்லா

சுர்வீன் சாவ்லா

இதில் பிரபல இந்தி நடிகை சுர்வீன் சாவ்லாவும் இணைந்துள்ளார். இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுர்வீன் சாவ்லா. இவர், தமிழில் வசந்த இயக்கிய மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். வெப் சீரிஸ்களில் சுர்வீன் நடித்து வருகிறார்.

காஸ்டிங் கவுச்

காஸ்டிங் கவுச்

தற்போது அவர் அளித்த பேட்டி ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையையும் அதிர வைத்துள்ளது. ஆடிசன்களின் போது பல இயக்குனர்கள் தன்னுடை முழு உடலையும் பார்க்க ஆசைப்பட்டதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக தென்னிந்தியாவில் அவருக்கு மூன்று முறை காஸ்டிங் கவுச் அனுபவம் நேர்ந்ததாக சுர்வீன் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஒருவர் தன்னுடைய உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அறிய விரும்புகிறேன் என தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லை

தொல்லை

தேசிய விருது பெற்ற பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் ஆடிசனின் போது தனக்கு மிகவும் தொல்லை கொடுத்ததாக சுர்வீன் தெரிவித்துள்ளார். தனக்கு உடல் நிலை சரியில்லாத போது, அவர் மும்பைக்கே புறப்பட்டு வந்துவிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் தனது விருப்பத்தை அவரது நண்பர் மூலம் தெரியப்படுத்தியதாகவும், ஆனால் அந்த வாய்ப்பை தான் மறுத்துவிட்டதாகவும் சுர்வீன் தெரிவித்துள்ளார்.

வித்யாபாலன் புகார்

வித்யாபாலன் புகார்

சமீபத்தில் தான் இதே போல் நடிகை வித்யாபாலனும் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் கூறி இருந்தார். அவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் யார் என வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனாலும் அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் பெயர் அந்த விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போதும் அதேபோல், சுர்வீனிடம் தவறாக நடந்து கொண்டவர் யார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X