நடிகர் கார்த்திக் வலையில் சிக்காத சுவலட்சுமி.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!

சென்னை: 90களில் தமிழின் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை சுவலட்சுமி. கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட சுவலட்சுமிக்கு பல நடிகர்கள் வரிசை கட்டி காத்திருந்து காதல் வலைவிரித்த போதும், அதில் அவர் சிக்கவில்லை என்று, சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமைதியான, அதே நேரம் அழகான முகவாகு கொண்ட சுவலட்சுமி, 1994 ஆம் ஆண்டு உத்தோரன் என்ற பெங்காலி படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படத்தில் நடித்து வந்த இவர், மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இயக்குனர் வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். இவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.

Actress Suvalakshmi is not in love with Karthik says Bailwan Ranganathan

நடிகை சுவலட்சுமி: இதைத் தொடர்ந்து, விஜய்க்கு ஜோடியாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளி வந்த லவ் டுடே படத்தில் நடித்தார். அந்த படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்திருந்தார். இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. விஜய், அஜித், பிரபுதேவா, கார்த்திக், சரத்குமார், முரளி என பல முன்னணி நடிகர்களோடு நடித்த சுவலட்சுமி, 2001ஆம் ஆண்டில் விஞ்ஞானியான ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டு சுவிட்சர்லாந்தில் செட்டிலானார்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில், சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், சுவலட்சுமி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2000ம் ஆண்டுக்கு பின் தமிழில் சினிமாவில் கதாநாயகிகளே கவர்ச்சி ஆட்டம், குத்துப்பாடலுக்கு நடனமான தொடங்கிவிட்டார்கள். இதற்காக நடிகைகளுக்கு அதிகமாக சம்பளமும் கொடுக்கப்பட்டது. தமிழ் படங்களில் தமிழ் பேசும் பெண்கள் நடிக்க வராமல் இருப்பதற்கு காரணமே, சினிமாவிற்கு போனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற பயம் தான். இதனால் தான் தெலுங்கு, மலையாளம், பாலிவுட்டில் இருந்து வந்து நடிகை ஆதீத கவர்ச்சி காட்டி நடித்தார்கள். குறிப்பாக மும்பையில் இருந்து வரும் மாடல் அழகிகள் கவர்ச்சியை போதும் என்று சொல்லும் அளவுக்கு காட்டினார்கள்.

கவர்ச்சி நோ: ஆனால், கவர்ச்சியாக நடித்தால் தான் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை நடிகை சாவித்ரி, தேவிகா, பத்மினி போன்ற நடிகைகள் மாற்றினார்கள். அதேபோல முன்னணி நடிகையான சுவலட்சுமி கனவுக்கன்னியாக இருந்த போதும் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார். தமிழில் இவர் மொத்தமே நடித்தது 13 திரைப்படங்கள் தான். அதில் 7 திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஆகும். இவர் நடிகை சுவலட்சுமி பெரும்பாலான படங்களில் சேலை கட்டிக் கொண்டு போர்த்திக்கொண்டுதான் நடித்தார். எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தியும் அவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற முடிவில் உறுதியாக இருந்ததால், கமல்ஹாசன், ரஜினியின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதை மறுத்தார்.

காதல் வலையில் சிக்காத நடிகை: அதுமட்டுமில்லை, பல நடிகர்கள் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய போதும், தனது முடிவில் உறுதியாக இருந்தார். இவர் கார்த்திக்குடன் கோகுலத்தில் சீதை படத்தில் நடித்த போது, நடிகர் கார்த்திக் அவருக்கு ரூட்டு போட்டார். ஆனால் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காமல், எல்லாத்துக்கும் நோ சொல்லி ஒழுக்கமாக இருந்தவர் நடிகை சுவலட்சுமி என்று பயில்வான் ரங்கநாதன் அவரை புகழ்ந்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X