ஆபாச படத்தில் நடித்தேன்.. நினைத்திருந்தால் செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.. ஸ்வர்ணமால்யா ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஃபேமஸ் ஆனவர் ஸ்வர்ணமால்யா. சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவருக்கு அலைபாயுதே படம் சினிமாவுக்கான கதவை திறந்து வைத்தது. அதில் ஷாலினிக்கு அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். இந்தச் சூழலில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக இருப்பது அலைபாயுதே. மாதவன் ஹீரோவாக அந்தப் படத்தில் ஸ்வர்ணமால்யா குணசித்திர நடிகையாக அறிமுகமானார். ஷாலினியின் அக்காவாக அந்தப் படத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இதற்கிடையே சின்னத்திரையில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார் அவர். அலைபாயுதே படத்தின் வெற்றிக்கு பிறகு ஸ்வர்ணமால்யாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

swarnamalya tamil cinema kollywood

அடுத்தடுத்த வாய்ப்புகள்: அலைபாயுதே படத்துக்கு பிறகு எங்கள் அண்ணா, யுகா, மொழி, பெரியார், அழகு நிலையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு புலிவால் என்ற படம் வெளியானது. அந்தப் படத்தை மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகள்: சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி ஸ்வர்ணமால்யா படு பிஸியாகவே இருந்தார். ஆனால் அந்த சமயத்தில்தான் அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன. முக்கியமாக ஒரு சாமியாருடன் அவர் இணைத்து பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது. நிலைமை இப்படி இருக்க சில காரணங்களால் சினிமா மற்றும் சின்னத்திரையிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிட்டார் அவர்.

ஸ்வர்ணமால்யா பேட்டி: இந்நிலையில் அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவை நான் எடுக்கவே இல்லை. எனது பெற்றோர்கள்தான் எடுத்தார்கள். அவர்களும் நல்ல எண்ணத்தில்தான் அந்தத் திருமண ஏற்பாட்டினை செய்தார்கள். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் சின்ன வயதிலேயே எனக்கு திருமணத்தை முடித்தார்கள். ஆனால் அந்த வயதில் நான் பேசியிருக்க வேண்டிய விஷயங்களை எனது அப்பா, அம்மாவிடம் நான் பேசவில்லை. யோசிக்கக்கூட நேரமில்லாமல் அப்போது நான் ஓடிக்கொண்டிருந்தேன்.

புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை: திருமணமான பிறகு ரிலாக்ஸாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது பெரிய தவறு என்று பின்னால்தான் புரிந்தது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைக்கு சினிமா காரணம் இல்லை. அதை எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் நேரம்தான் வீணாகும். எனது தாத்தா சினிமாவில் இருந்தவர்தான். ஆனால் எனக்கு சினிமாவில் வழிகாட்ட சரியான ஆள் இல்லை. எந்த இலக்கும் இல்லாமல் சினிமாவில் இருந்ததால் யாரிடமும் ஆலோசனையும் செய்யவில்லை.

ஆபாச படத்தில் நடித்தேன்: மணிரத்னம் போல் ஒரு இயக்குநர், தயாரிப்பாளரிடம் வேலை செய்த பிறகு எல்லா தயாரிப்பாளர்களும் அவர் மாதிரியே இருப்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஒரு ஆபாச திரைப்படத்தில் எனக்கே தெரியாமல் நடித்துவிட்டேன். அதில் பத்து நிமிடங்கள்தான் நான் நடித்தேன். அதுவும் ஒரு கெஸ்ட் ரோல்தான். அந்தப் படம் ஒரு டப்பிங் படம்தான். ஒரிஜினல் படத்தின் சிடியையும் என்னிடம் கொடுத்தார்கள். அந்தக் காட்சியில் நடிப்பதற்கு நான் ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டிருக்கிறேன். அப்படி என்றால் நான் எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்திருக்கிறேன்.

நினைத்திருந்தால் செய்திருக்கலாம்: நான் நினைத்திருந்தால் நீதிமன்றத்துக்கு சென்று அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. ஏனெனில் ஒரு பிரச்னைக்கு மேல் இன்னொரு பிரச்னை வந்துவிடுமோ என்று எனக்கு தோன்றியது. இப்படி நான் தவறுகள் செய்திருந்தாலும் எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றால் அது திருமணம்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X