விஜய்யுடன் ஸ்வர்ணாமல்யா... போட்டோவிற்கு பின்னால் இருக்கும் கதை!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த ஸ்வர்ணமால்யா, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். ஷாலினி, மாதவன் நடித்த அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக ஸ்வர்ணமால்யா நடித்து இருந்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், எங்கள் அண்ணா திரைப்படத்தில் விஜயகாந்துக்கு தங்கையாக நடித்து கவனத்தை ஈர்த்தார். பின், ஜோதிகா பிருத்விராஜ் நடித்த மொழி படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்து இருந்தார்.
நடிகை ஸ்வர்ணமால்யா நடிகையாக மட்டுமில்லாமல், தொகுப்பாளராகவும், கிளாசிக் நடன கலைஞராகவும் உள்ளார். 3 வயதில் இருந்து நடனம் கற்று கொண்ட ஸ்வர்ணமால்யா, தனது 17வது வயதில் பரதத்திற்கான 'யுவ கலா பாராதி' என்ற விருதையும் வென்றுள்ளார். 12வது படிக்கும் போது சன் டிவியில் தொகுப்பாளராக வந்தார். அதன் பின், 2002ம் ஆண்டு அர்ஜூன் ராம ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால் சில ஆண்டுகளிலேயே கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றும் மீண்டும் சென்னைக்கே வந்தார். தற்போது ஸ்வர்ணமால்யா நாட்டிய பள்ளி தொடங்கி பரதநாட்டியம் கற்று கொடுத்து வருகிறார்.

21 வயதில் விவாகரத்து: ஸ்வர்ணமால்யா அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். அதில், " 21 வயதிலேயே திருமணம் நடந்து விவாகரத்து செய்தேன். விவாகரத்துக்கான காரணம் என்ன என்று கூட எனக்கு தெரியவில்லை. எனக்கு 21 வயது, அவருக்கு 25 வயது. எது சரி, எது தவறு என்று தெரிந்து கொள்ளும் பக்குவம் எங்களிடம் இல்லை. அமெரிக்காவின் வாழ்க்கை முறையும் எனக்கு பிடிக்கவில்லை. விவாகரத்துக்கு அதிகமாக மன அழுத்தம் ஏற்பட்டது. சில நேரம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட வந்தது. பின் என் தங்கை தான், மன நல மருத்துவரை சந்திக்கும் படி அறிவுரை கூறினார். எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியதால், மன நல மருத்துவரை சந்தித்து 2 மாதம், மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்து கொண்டேன். அதன் பின் என் வாழ்க்கையில் பல மாற்றம் நடந்தது என்று கூறியிருந்தார்.
அழகான நினைவு: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வர்ணாமல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், அண்மையில் ஒருவர் இந்தப் புகைப்படத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய்யின் சிவகாசி படத்தின் விளம்பர விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது, அதில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. நாங்கள் சிவகாசிக்குச் சென்று தொழிற்சாலைகளில் பட்டாசு தொழிலாளர்களைச் சந்தித்தோம் பேசினோம். அவர்களுடன் முழு நாளையும் கழித்தோம். அது மிகவும் அழகான தருமணம் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











