அவர்தான் காதலரா..? நடிகருடன் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.. தீயாய் பரவும் நியூஸ்!

By

சென்னை: நடிகருடன் பிரபல நடிகை வெளியிட்டுள்ள போட்டோவை அடுத்து இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வைகை என்ற படம் மூலம் தமிழில் நடிகையானவர் சுவாசிகா.

கேரளாவை சேர்ந்த இவர், அடுத்து ராசு மதுரவன் இயக்கிய கோரிப்பாளையம், உதவி இயக்குனர்கள் நடித்த மைதானம் உட்பட பல படங்களில் நடித்தார்.

டிவி தொடர்கள்

டிவி தொடர்கள்

இவர், சமுத்திரகனியுடன் நடித்த சாட்டை, புதுமுகங்கள் நடித்த அப்புச்சி கிராமம் படங்கள் கவனிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் ஏராளமான டிவி தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

மோகன்லால்

மோகன்லால்

இவர் இப்போது மலையாளத்தில் ஆராட்டு என்ற படத்தில் நடித்துள்ளார். மோகன்லால், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ராமச்சந்திர ராஜூ உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் சுவாசிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே நடிகை சுவாசிகா, வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாயமும் காதலும்

மாயமும் காதலும்

அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில், மலையாள எழுத்தாளரும் நடிகருமான பத்ரிநாத் என்பவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில், நீங்கள் அன்பான அக்கறையுள்ள, அர்ப்பணிப்புள்ளவர் பாஸ்... என்னைச் சுற்றி மாயமும் காதலும் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

இதையடுத்து சுவாசிகா இவரை காதலித்து வருவதாகச் செய்தி பரவியது. ஏராளமான நெட்டிசன்ஸ், சூப்பர் ஜோடி என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர் தவறான தகவல் என்று அவர் தெரிவித்துள்ளார். இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைக் கூறியுள்ளார்.

உண்மையில்லை

உண்மையில்லை

'இருவரும் இணைந்து வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளோம். வரும் 14 ஆம் தேதி அது வெளியாக இருக்கிறது. நாங்கள் நண்பர்கள்தான். மற்றபடி அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வரும் தகவல்களில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X