“மிஷன் இம்பாசிபிள்“ தெலுங்கு படத்தில் கமிட்டான டாப்ஸி !
சென்னை : நடிகை டாப்சி புதிதாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
மிஷன் இம்பாசிபிள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்வரூப் இயக்குகிறார்.
இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

பாலிவுட்டில் முன்னணி
தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். அதிலும் குறிப்பாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். வெயிட்டான கதாபாத்திரம் என்றாலே கூப்பிடு டாப்ஸியை என்று இயக்குநர்கள் சொல்லும் அளவுக்கு தன் நடிப்பால் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.

சிறப்பான நடிப்பு
தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதையும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுத்தந்த திரைப்படம் ஆடுகளம். இந்தபடத்தில் வரும் பாடலுக்கு ஏற்றார் போல, வெள்ளாவி வச்சு வெளுத்த மாதிரி, வெள்ளையா, நல்லா கொழு கொழுனு இருப்பாங்க டாப்ஸி. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

வெற்றி பெற்றது
இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் சரியாக படம் அமையாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பல திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹசீன் தில்ரூபா நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியானது. திருமணமாகி வந்த சிறிது நாளில் கணவனை கொலை செய்ததற்காக இளம் பெண் ராணி கைது செய்யப்படுகிறாள். அவள் ஏன் கொலை செய்கிறார் என்பதை மிகவும் சாமர்த்தியமாக எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிகிறது.

மிஷன் இம்பாசிபிள்
இந்நிலையில் நடிகை டாப்சி புதிதாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ஸ்வரூப் இயக்குகிறார். இப்படத்திற்கு மிஷன் இம்பாசிபிள் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Recommended Video

மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு
அனுராக் காஷியப் இயக்கும் தபாரா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியீ ட்டுக்கு தயாராக உள்ளது. மேலும், சபாஷ் மித்து, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஜன கண மன போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











