திடுதிப்புன்னு முடிய வெட்டிய பிரபல நடிகை.. காரணத்த கேட்டா ஆடிப்போயிடுவிங்க..!

சென்னை: நடிகை டாப்ஸி திடீரென தனது முடியை வெட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Recommended Video

தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதையில் டாப்ஸி-வீடியோ

நடிகை டாப்ஸி தமிழில் நடிகர் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்தார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையானார்.

தொடர்ந்து பாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் டாப்ஸி. இந்தி மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹஸீன் தில்ருபா

ஹஸீன் தில்ருபா

பாலிவுட்டில் பிஸியான நடிகையாக உள்ள டாப்ஸி கடைசியாக தப்பட் படத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம். தற்போது ஹஸீன் தில்ருபா என்ற படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி.

முடி வெட்டி

முடி வெட்டி

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை டாப்ஸி அவ்வப்போது தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது நடிகை டாப்ஸி தனது முடியை வெட்டியுள்ளார்.

முடியுடன் வீடியோ

இரண்டு நாட்களுக்கு முன்னர் நீல நிறத்துடன் நீளமான முடியுடன் வீடியோ வெளியிட்டிருந்தார் டாப்ஸி. அதற்கு
நான் எப்போதும் என் தலைமுடியுடன் சோதனை செய்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து நான் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்து ரகசியமாக என் தலைமுடியை ஸ்ட்ரைட்னிங் செய்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நீலம் மற்றும் ஊதா நிற கலரிங் செய்தேன், தற்போது கருப்பு அதிகமாகிவிட்டது என்று கூறியிருந்தார்.

நறுக்கு நறுக்கு..

இந்நிலையில் இன்று முடியை வெட்டிய போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் டாப்ஸி. மேலும் சோதனை தொடர்கிறது.. என் தலைமுடியின் நிறத்தை நீண்ட காலமாக கையாள முடியாததால், அவற்றை வெட்டிவிட்டேன். எனது பஞ்சாபி மரபணுக்களில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே நறுக்கு நறுக்கு என நறுக்கிவிட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X