வாவ்.. அக்கான்னா இப்படிதான் இருக்கனும்.. தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!
மும்பை: நடிகை டாப்ஸி அவரது தங்கைக்கு எதிர்பாராத பிறந்தநாள் பரிசு ஒன்றை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தொடர்ந்து ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

ஜீப் காம்பஸ்
இந்நிலையில் அவரது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்பிரைஸ் கிஃப்ட் ஒன்றை பரிசளித்துள்ளார் டாப்ஸி.
தன்னுடைய சொந்த பணத்தில் அவருடைய தங்கைக்கு ஜீப் காம்பஸ் வாகனத்தை பரிசளித்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்கள்
ஜீப் காம்பஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரிடமும் ஜீப் காம்பஸ் கார் உள்ளது.

கேக் வெட்டி கொண்டாட்டம்
ஜீப் வாங்கிய கையோடு அங்கேயே கேக் வெட்டி பிறந்தநாளையும் கொண்டாடினர் டாப்ஸியும் அவரது தங்கையும். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் போட்டோ
நடிகை டாப்ஸி தனது தங்கைக்கு ஜீப் பரிசளித்தது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனை ஏராளமானோர் லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











