For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவருடன் டேட்டிங் செல்ல இதுதான் காரணம்.. பாய் ஃபிரண்ட் குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி!

    |

    தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

    மாநாடு பற்றிய மாஸ் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...உற்சாகத்தில் சிம்பு மாநாடு பற்றிய மாஸ் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...உற்சாகத்தில் சிம்பு

    அதன் பிறகு பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருந்த டாப்ஸி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

    காதலருடன் ஜாலி

    காதலருடன் ஜாலி

    தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி வெளிநாட்டு பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போ என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாப்ஸி தனது காதலர் மற்றும் சகோதரியுடன் கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு சென்று விடுமுறையை கொண்டாடினார்.

    Taapsee Pannu Speech - திரும்ப வந்துட்டேனு கெத்தாக சொல்லிய டாப்சீ | Game Over- வீடியோ
    பெரும் வைரல்

    பெரும் வைரல்

    அங்கு காதலருடன் ஆட்டம் போட்ட வீடியோக்கள் மற்றும் பிகினியில் சன்பாத் எடுத்த போட்டோக்களை எல்லாம் வெளியிட்டார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

    மதியாஸுடன் டேட்டிங்

    மதியாஸுடன் டேட்டிங்

    இந்நிலையில் நடிகை டாப்ஸி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் மதியாஸ் போவுடனான ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் டாப்ஸி. மதியாஸ் போவுடன் உள்ள உறவு குறித்து வெளிப்படையாக அறிவிக்க என்றும் அவருடன் டேட்டிங் செல்வதற்கான காரணம் குறித்தும் கூறியுள்ளார்.

    என்னுடைய இன்னர் சர்க்கிள்

    என்னுடைய இன்னர் சர்க்கிள்

    அதாவது, சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள ஒருவருடன் நான் டேட்டிங் செல்ல விரும்பவில்லை. எனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைக்க விரும்புகிறேன். அவர்களின் பிறந்தநாளில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன் நான் எப்போதும் ஒரு படத்தைப் பகிர்ந்துகொள்கிறேன், என் இன்னர் சர்க்கிளின் ஒரு அங்கமான மத்தியாஸுக்கும் அவ்வாறே செய்தேன் என கூறியுள்ளார்.

    திருமணம் எப்போது?

    திருமணம் எப்போது?

    மேலும் தனது திருமணம் குறித்தும் நடிகை டாப்ஸி அந்த நேர்காணலில் மனம் திறந்துள்ளார். அதாவது நான் எப்போது என் தொழிதலில் மெதுவாக செல்கிறேனோ, ஆண்டுக்கு 5, 6 படங்கள் என்று இல்லாமல் 2, 3 படங்கள் என பண்ணும் போது என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பேன் என கூறியுள்ளார்.

    பேட்மிண்டன் வீரர்

    பேட்மிண்டன் வீரர்

    டாப்ஸி டேட்டிங் செல்லும் மதியாஸ் போ, டென்மார்க்கை சேர்ந்த ஒரு பேட்மிண்டன் வீரர் ஆவார். 2015ஆம் ஆண்டுக்கான யூரோப்பியன் கேம்ஸில் தங்கப்பதக்கம் வென்றார் மதியாஸ் போ. மேலும் 2012 சம்மர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    கிரேஸி கிரியேட்சர்

    கிரேஸி கிரியேட்சர்

    கடந்த ஆண்டு டாப்ஸியின் பிறந்தநாளின் போது, இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பகிர்ந்து கொண்ட மதியாஸ், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் கிரேஸி கிரியேட்சர். அடடா நாங்கள் வேகமாக வளருகிறோம், குறிப்பாக நீ. என்னை மிகவும் எரிச்சலூட்டாத ஒருவரை நான் கண்டேன், (சில நேரங்களில்) என் மொக்கை ஜோக்குகளுக்கு சிரிக்கிறீர்கள் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று நம்ப முடியவில்லை. உங்களைப் புன்னகைக்க வைக்க நான் கடினமாக முயற்சிப்பேன் என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Taapsee opens up about her boy friend. Taapsee dating with Mathias Boe who is a badminton player from Denmark.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X