தங்கத் தாரகை டாப்ஸி பன்னுக்கு இன்றுடன் 33 வயசு ஆச்சு.. குவியும் வாழ்த்துக்கள் !

மும்பை : வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா என பலரையும் கேட்க வைத்த அதீத அழகும் சிறந்த நடிப்பும் கொண்டவர் நடிகை டாப்ஸி பன்னு.

Recommended Video

நடிகை Kushbu வீட்டில் சோகம் | Tapsee Pannu Grandma Passed away

ஹிந்தி திரைப்படத் துறையில் மிக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தும், பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வரும் டாப்ஸியை ரசிகர்கள் பலரும் தங்கத் தாரகையாக தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் இவ்வாறு நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் டாப்ஸி ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

தமிழ் வெள்ளைக்காரியாக

தமிழ் வெள்ளைக்காரியாக

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியான பலராலும் புகழப்பட்டும், அவ்வாறு அவர்கள் இருவரும் இணையும் ஒவ்வொரு திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்ற நிலையில், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இரண்டாம் முறையாக இணைந்து தேசிய விருது பெற்ற திரைப்படமான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு, வெள்ளாவி வச்சு வெளுத்த வெள்ளைக்காரியாக நம் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை டாப்ஸி பன்னு.

மிகப்பெரிய சர்ப்ரைஸ்

மிகப்பெரிய சர்ப்ரைஸ்

தமிழில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு நடிகையாக டாப்ஸி இருந்து வருகிறார். எனினும் ஹிந்தியில் இவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் இன்றளவும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு டாப்ஸி மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான "பிங்க்" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான "நேர்கொண்ட பார்வை" தல அஜித் நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து வேற லெவல் ஹிட்டானது.

பெண்களைப் பற்றிய விழிப்புணர்வு

பெண்களைப் பற்றிய விழிப்புணர்வு

டாப்ஸியுடன் இணைந்து அறிமுகமான பல கதாநாயகிகள் இன்றளவும் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிப்பதையே விரும்பும் நிலையில் டாப்ஸி அதிலிருந்து சற்று விலகி பெண்களைப் பற்றிய சமூக விழிப்புணர்வு கொண்ட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வாறு சமீபத்தில் இவர் நடித்த "தப்பட்", "சாண்ட் கி ஆன்க்", "ஹசீன் தில்ருபா" உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை இந்திய கதாநாயகிகளில் வித்தியாசமான ஒரு நடிகையாக பலரையும் பார்க்க வைத்தது.

அழகும் துணிச்சலும்

அழகும் துணிச்சலும்

இவ்வாறு படங்களின் மூலம் பெண்களுக்காக குரல் கொடுத்துவரும் டாப்ஸி பன்னு, நிஜத்திலும் பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களை பற்றி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அழகும் துணிச்சலும் கொண்டு இந்தியத் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு டாப்ஸி வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

திரைப்படங்களிலும், நிஜத்திலும் நம் அனைவரையும் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வரும் டாப்ஸி பன்னு ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X